Saturday, 30 June 2018

ரசனை !!!


முதல் முறை கண்ணாடியில் என்னை பார்த்து ரசிக்க ஆசைகள் தூண்டின !!
என் முகத்தை சரியாக அடையாளம் காட்டும் கண்ணாடி எதுவேன கண்டறிய தொடங்கினேன் !!
என் எதிரெ தோன்றிய உருவம் என்னுடையது தானா என முதல் சந்தேகம் எழுந்தது ?
ஒவ்வொரு கன்ணாடியிலும் ஒவ்வொரு பிம்பம் பிரதிபலித்துக் கொண்டே இருந்தது !!
யதார்த்தப் பார்வைக்கும் , ரசித்துப் பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம் காணப்பட்டது !!
ரசனை இல்லாதவன் அவனை எப்படி ரசிக்க முடியும் என்ற கேள்வி கன்ணாடி என் முன் வைத்தது !!
அனைத்து பழி சொற்களும் என்னை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருப்பது போல் தெரிந்தது !!
பேரின்பத்திற்கும் , குறுமகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் எதிரே உள்ள வார்த்தைகளை மட்டுமே வாழ்க்கை தத்துவமாக பிம்பம் என்னிடத்தில் சொல்லிக் கொண்டே இருந்தது !!
மரணத்திற்கு மேலான பொருள் தரக்கூடிய சொற்களாக அவை தெரிந்தது !!
ஆம் நான் தனிமையில் இருக்கும் போது என்னை கைது செய்த சொற்கள் தான் அவை . அது விரக்தியா ? இல்லை என் ஆசைகளின் விளைவா ? நான் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் ஏமாற்றங்களா ? இல்லை வாழ்க்கை முறையை வழி நடத்தும் என் தவறான எண்ணங்களா ?
புரிதல் இல்லாதவனாய் கண்ணாடியின் முன் நிற்கிறேன் !!!
இவை அனைத்தும் எதிரே தோன்றிய பிம்பத்தின் வினாவளா இல்லை என்னுடைய பிரதிபலிப்பா சரியாக சொல்ல
தெரியவில்லை !!
மீண்டும் குழப்பத்துடனே நான் குருடன் என்பதை மறைத்து எனக்கு பாதைக் காட்டும் கைத்தடியை எடுத்து நடக்க தொடங்கினேன் !!!

Tuesday, 26 June 2018

ஹைக்கூ !!!

மகளாய் தோற்றவள் !
காதலியாய் தோற்றவள் !
மனைவியாய் தோற்றவள் !
தாயாய் வெற்றி பெறுகிறாள் !
மகனாய் தோற்றவன் !
காதலனாய் தோற்றவன் !
கணவனாய் தோற்றவன் !
தந்தையாகவும் தோற்கடிக்கப்படுகிறான்
அன்பு மனைவியுடம் !!!!

Saturday, 23 June 2018

சுவாசம் தேவை !!!

சுவாசம் தேவை !!!

அன்று மட்டும் சுவாசம் வழக்கத்தை விட சற்று அதிகமாக தேவைப்பட்டது .
நான் இருக்கும் இடத்தில் மட்டும் சுவாசிக்க காற்று இல்லாததுப் போல் ஒரு சுழல் !
சுற்றி முற்றி பார்த்தேன் தண்ணீருக்கு அடியுலும் இல்லை நான் !
இதய துடிப்பின் சத்தம் மட்டும் ஏனோ ,அதிகரித்துக் கொண்டே இருந்தது !
காற்றை தேடுவதா ? இதயத்தை ஆசுவாசப்படுத்துவதா ? தெரியவில்லை !
இதயமோ வினாடிக்கு , வினாடி தன் துடிப்பை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தது !
நான் தேடிய அதேக் காற்று
அதை புயலேனவும் சொல்ல முடியாது
மரங்களின் அசைவுகளின் பிறப்புக்கள் என்றும் சொல்ல முடியாது .
சுவாசிக்கும்முயற்சியில் நான் ஈடுப்படும் போது தான் தெர்ந்தது !
சுவாசம் எனக்கில்லை என !!!!
காற்றை கரைத்து நான் உயிர் வாழும் சுழ்ச்சியில் , காற்று என்னை கரைத்து
உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றது என்று !
இன்று வழக்கத்தை விட சுவாசம் சற்று அதிகமாக தேவைப்படுகிறது ?????
Show More Reactions

Tuesday, 19 June 2018

என் கல்லறை எழுத்துக்கள் !!!

உன் முதல் ஆசையிலிருந்து உன் முதல் எதிரி உண்டாகிறான் !
உன் முதல் நம்பிக்கையிலிருந்து உன் முதல் துரோகி உண்டாகிறான் !
உன் முதல் பார்வையிலிருந்து உன் முதல் ஏமாற்றம் உண்டாகிறது !
உன் பிறப்பிற்கு எதிர்காலத்தில் உன்னை கைவிடும் அனைவரும்
 மகிழ்வர் !
ஏன் பிறந்தோமென நீ மட்டும் அழுதுக் கொண்டிருப்பாய் !
உன் பிறப்பிற்கு எந்த காரணமும் இல்லை !
ஆனால் ,
உன் இறப்பிற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு !!
நி பிறக்கும் போது மகிழ்ந்த உறவுகள், நீ இறக்கும்போது அழுதுக்கொண்டிருக்கும் !
அழுதே பிறந்த நீ இறந்த பின் உணர்வாய் ?
நி தேடியது ?
தேடி ஓடியது ?
நி ஆசைப்பட்டது ?
உனக்கு கிடைத்தது?
கிடைக்கக் காரணமாய் இருந்தது?
உன் நம்பிக்கை ?
உன் ஏமாற்றம் ?
உன் சந்தோஷம் ?
இவைகள் ஏதும் உண்மையில்லை என்று !!!!!!

Saturday, 16 June 2018

கைத்தறிப் பட்டு !!!

கைத்தறிப் பட்டு !!
எத்தனை முறை - துவைத்தாலும்
சாயம் போகவில்லை
அவள் காதல்...
எதைக் கொண்டு - அலசியும்
வெளுக்கவில்லை
அவள் காதல்...
காதல் கற்பனையில் - கைத்தறி
நூலின் சொந்தக்காரி
அவள் ...
கனவுகளை நெசவு செய்து
வண்ணமிகு ஆடையில்
என் காதலின் மானம் காத்தவள்
அவள் ...
அவள் நினைவாய் உருவான
அனைத்து பருத்தி செடிகளும்
ஒவ்வொரு காதல் கதைகள்
சொல்லிக் கொண்டிருக்கும்...
மாண்ட பட்டுப்பூச்சிகள்
பட்டு நூல்களாய் மாறி
அவளின் காதலை நினைவுப்படுத்தவே இருக்கிறதாம் அவள்
உடலை ஆடையாய்
மறைக்கும் போது!!!
அன்று நான் பரிசளித்த
கைத்தறி பட்டு அவளுக்கு
மற்றொரு அழகை தந்தது
ஆச்சிரியத்தின்உச்சக்கட்டம் அது!!
இன்று அவள் மணவறையில்
அதே பட்டு புடவையில்
அரிதாரம் பூசிய முகத்துடன்
அதிர்ச்சியின் உச்சக்கட்டம் அது!!
அந்த பட்டு புடவையும் ஒரு நாள்
குப்பைக்கு செல்லும்
என் காதல் போல
அவள் படுக்கை அறையில் மட்டும் ,
ஏமாற்றத்தின் யதார்த்தம் இது !!!!

Tuesday, 12 June 2018

மறந்த மரணம் !!!

இரவையும் , பகலயும் எதிர்த்தபடியான வாழ்க்கை அது .
யதார்த்தத்திற்கும் , ஏமாற்றத்திற்கும் இடையேயுள்ள புரிதலை தேடியே, என் முதிர்வு என்னை முந்தி செல்ல முயல்கிறது .
உன் பெயர் கொண்ட சூனியக்காரி என் பெயரை உச்சரித்தபடியே , என் தூக்கத்தை கொலை செய்ய முயற்சிக்கிறாள் தினமும் ..
பல முறை தற்கொலைக்கு முயற்சித்தும், ஒவ்வொரு முறையும் சாவு எனக்கு எதிரியானது ...
எமனும் என்னை வெறுத்துவிட்டான் .
அவன் பாசக்கயிறு மீண்டும் மீண்டும் துளைந்து போனது
என் மரணப்படுக்கையில் மட்டும் .
வலியா , வடுவா , ரணமா ,ஏதோ ஒன்று , வாழ்க்கை என்னும் பயனத்தில் தினம் தினம் நிரந்திரமாகிக்கொண்டே உள்ளது ....
ஏதோ ஒரு மூலையில் உன் மூச்சு காற்று கலந்த காற்று என் சுவாசத்திற்கு தடை செய்கிறது ..
உன்னை உணர முயற்சிக்கும் போது ஒரு வகை வெப்பம் என் உடலை உஸ்னப் படுத்தியவறே உள்ளது .
போதும் உன் கன்னாம்பூச்சி விளையாட்டு , நீ பிடிங்கி சென்ற என் கண்களை திரும்ப தந்துவிடு , உன்னை காட்சிப் படுத்த அது ஒன்றே சாட்சி..
உன் உள்ளங்கை விரலில் உள்ள மரு மீண்டும் மீண்டும் உன் வருடலில் நினைவுப்படுத்தியவாரே உள்ளது சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில்.. .
மீண்டும் ஒரு முறை காதலித்து விடு நிலவே ,
என் நிரந்திர மரணம் உன் காதலோடு தொடங்கட்டும் !!!!!

Sunday, 10 June 2018

என்னுள் நான் !!!

இன்று சுடுகாட்டில் உச்சக்கட்ட போதையில் இருந்த அனாதைக்கு பேயிடம் கிடைத்த அறிவுரை !!!!
நீ யார் என்று கேட்டது பேய் ?
நல்லவன் என்று சொல்லி சற்று நகர்ந்து சென்றான் அனாதை ..
சிரித்தவரே பேய் சொன்னது
நல்லனாக மட்டும் வாழாதே உன்னால் யாரையும் திருப்த்தி செய்யமுடியாது . உன்னாலும் திருப்த்தி அடைய முடியாது !!!
இங்கு யாரும் யாருக்காகவும் வாழவில்லை என்று சொல்லிக்கொண்டு , அவரவர் ஆசைகளை தேடியவாரு , மாற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கை தான் நல்லவன் என்பதன் பொருளாகும் ....
நீ நல்லவன் என்பதால் உன் உடல் நாற்றமடிக்காது போவதில்லை !!!
இங்கு நீ வாழும் பூமியில் உச்சக்கட்ட நாற்றம் அவரவரின் இரகசியம் மட்டுமே ....
இறந்த உடல் நாற்றத்தை விட , உயிருள்ளவரின் இரகசியம் சுவாசத்திற்கு அப்பார்பட்ட நாற்றமாகும் ...
வாழ்க்கையை எப்போதும் வாழ நினைக்காதே , சில வேலைகளில் வேடிக்கைப் பார் , நீ எதை நோக்கி ஓடுகிறாயோ , அது மற்றோன்றை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது அப்போது புரியும் ...
இப்படிக்கு சுத்தமான நல்ல பேய் !!!

Thursday, 7 June 2018

கற்பனை காதலியே !!!

உன்னை சுமக்க தெரிந்த எனக்கு உன் அழகை மறைக்கும் ஆடையை சுமக்கும் சக்தி இல்லாமல் போனதடி என் கற்பனை காதலியே !!!
என் ஆணாதிக்க திமிரை உன்னிடத்தில் கட்டயமாக்கும் போது , ஒவ்வொரு முறையும் உன் வெட்க்கம் என் திமிரை கொள்ளுதடி என் கற்பனை காதலியே !!!
பெண்ணுக்கான தனி உரிமையை என்னிடம் நீ பகிரும் தருவாய் , நாம் உறங்கும் மெத்தை நம்மிடம் பொறாமைக் கொண்டதாம் உன் காதலைப் பார்த்து என் கர்ப்பனை காதலியே!!
நான் இருக்கும் இடத்தில் அவன் , அவள் கைக்கு கிடைக்கும் இடம் என்னுடையது என்று சண்டையிட்ட தலையணைக்கு சாமதானம் என்ன நான் சொல்லவது என் கற்பனை காதலியே !!!
நாம் இருவர் மட்டும் இருப்பதாய் நினைத்து உன் கை பிடிக்கும் நேரத்தில் , ஏதோ ஒரு மூலையில் இருக்கும் பல்லி வெட்கப்பட்டு சத்தம் போட்டபடியே தன் துணையை கூப்பிட்டதாம் காமம் கலக்காக் காதலை நேரில் காண !!!
பல்லிக்கும் உன் காதல் தெரிந்ததடியே என் கற்பனை காதலியே !!!
என் இதய துடிப்பை உன் காதில் வாங்கியபடியே என் மார்பின் மீது நீ தூங்க, சட்டன எழுந்த நான் , உன் இதயத்திலிருந்து வரும் மூச்சிக்காற்றை முத்தமிட முயற்சித்தேனடி என் கற்பனை காதலியே !!!
காற்றில் அசைந்தவாறு உன் கன்னம் மேல் உதிர்ந்து விளையாடும் உன் கூந்தலின் இசைக்கு என்றும் ஈடு இல்லையடி என் கற்பனை காதலியே !!!
நீ அருகில் நெருங்க நெருங்க என் உடல் வெப்பத்தை தணிக்க நம் வியர்வை துளிகளைக் கொண்டு என்னை குளிர வைத்த என் கற்பனை காதலியே !
அசதியில் நான் உறங்க , என் தலைக்கோதியவாறு நீ கொடுத்த முத்தம் , என் உதட்டில் தழும்பாய் மாறியதடி என் கற்பனை காதலியே !!!
காலை உன் பளிங்கு முகம் காண்பதற்கு நான் எழும்போது தான் தெரிகிறது என் காதல் மட்டும் இல்லை என் காதலியும் கற்பனை என்று !!!!!!

Tuesday, 5 June 2018

ஹைக்கூ !!!

நம்மை மறந்த நினைவுகளை ,
நாம் மறக்க நினைக்கும் போது , மறந்துவிட்டேன் என இதயம் சொல்வதும் !!!
நீ மறக்கவில்லை !
பத்திரமாக ஒளித்து வைத்திருக்கிறாய் யாருக்கும் தெரியாமல் ! 
என மூளை எதிர்த்து சண்டையிடுவதும் !
இந்த நினைவுகளை பார்த்தபடியே கண்கள் வியர்வை சிந்துவதும் !
அழகான சுமைகளே !!!!!

Monday, 4 June 2018

பரமபதம் ##
வாழ்க்கை ஒரு விதத்தில்
பரமபதம் போல் தான்...
கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் ! 
இதில் நீ படிக்கட்டிலும் ஏராளம்!!
பாம்பிலும் இறங்கலாம்!!!
பகடைகளாக இருக்காதே...!!
உன்னை யார் வேண்டுமானலும்
உருட்டி விளையாடி அவரவர்
கணிப்பை உன்னை வைத்து ஜெயித்துக்கொள்ளலாம்...!!
உன்னுடன் இருப்பவர்களிடமிருந்து
முதல் துரோகத்தால் அறிவாய்
நீ யாருடைய ஆடுகாய் என்று….
முதல் முறை மட்டுமே
தாயத்திற்கு மதிப்பு
அது தொடக்கம் என்பதால் ,
மறுமுறை தாயம் விழுந்தால்
அதன் மதிப்பு என்றும்
ஒன்று தான்...!!
உன்னை வெட்டி விட்டு
முந்திச் செல்லும் உறவுகள்
உனக்கு கற்றுக் கொடுப்பது ஏதுமில்லை. ஆனால் நீ அதில் கற்றுக்கொள்ள
ஏராளமான பாடம் உள்ளது...!!
நீ கடந்து போகும் பாதை
உன் கால்களை பொருத்து அமைவதில்லை.
உன்னிடம் பழகி விளையாடும்
உன் எதிர்ப்பாலினத்தின் விளையாட்டின் உறவை பொருத்தே அமைகிறது..!!
விளையாடி தோற்றாலும் சரி,
விளையாட்டை கற்றுக்கொண்டாலும் சரி ,
விளையாட்டின் துரோகத்தால்
வீழ்ந்தாலும் சரி ,
விளையாட்டைப் பார்க்கும்
பார்வையாளனாக மட்டும் இருந்திடாதே..!!
தோற்பதில் கிடைக்கும்
பாடத்தை விட,
துரோகத்தால் கிடைக்கும்
பாடம் என்றும் சிறந்ததே!!!
நீ உருட்டும் பகடைக்கும் , நீ நகர்த்தும் ஆடுகாய்க்கும் , அதன் பாதைக்கும் , அதில் நீ காணும் வெற்றிக்கும் உனக்கும் எந்த தொடர்புமில்லை என்று நீ எப்போது உணர்கிறாயோ அப்போது புரிய வரும்
வாழ்க்கையின் விளையாட்டு !
உனது வெற்றியை மட்டும்
இலக்காய் வைத்து
நீ உருட்டும் பகடையில்
இல்லை உன் வாழ்க்கை
கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப
நீ நகரும் , நகர்த்தும் கட்டங்களில் உள்ளது
உன் வாழ்க்கை!!!

Image may contain: 1 person, drawing






Comments

துன்பத்தில் மூளையின் அறிவுறை !!!

நிலை என்ற ஒன்று என்றும் நிரந்தரமாக இல்லை . 
நிலைமை என்ற ஒன்று தான் இங்கு, என்றும் நிரந்தரமாக இருக்கும் !!
நிரந்தரம் என்ற ஒன்றை உன் வாழ்வியலில் நீ அழித்து விட்டாய் என்றால் ,
ஏமாற்றம் என்ற ஒன்று உன்னை ஒருபோதும் பாதிக்காது !
ஏமற்றாம் உன் இறந்தகாலத்தில் இல்லையேல் , வாழும் காலம், வருங்காலம் என்றும் சுகமே !!
இங்கு ஏதும் தானே உருவாகவில்லை ,
அனைத்தும் உருவாக்கப்பட்டவையே !
அவன் அவள் தேவைக்கேற்ப !!!

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....