Monday 28 May 2018

கனவு !!!

ஆழ்ந்த உரக்கத்தில் அவளின் பெயரை 
உச்சரித்தவாரே முனங்கிக் கொண்டுருந்தேன்.
பக்கத்து கல்லறையில் இருந்த ஆன்மா
என்னை எழுப்பி தெளிவிப்படுத்தியது .
தூக்கத்திலும் அவளின் பெயர் சொல்லும் அனுமதி
உனக்கு மறுக்கப்பட்டதினால் தான்,
நீரந்தரமான தூக்கத்தில் ,
இங்கு நீ என்று ,
கனவைக் கொன்று தூங்குவிடு
சொர்க்கம் உனக்கானதாக இருக்கும்
இறந்த நினைவுகளை கனவாய் புதுப்பிக்காதே
இறந்தும் உன் வாழ்க்கை நரகமே என்றது ஆன்மா !!!!

Saturday 26 May 2018

ஹைக்கூ !!!

தூங்கிக் கொண்டிருக்கும் போது வாழ்ந்த வாழ்க்கை கனவாய் போனது !
விழித்துக் கொண்டிருக்கும் போது வாழும் வாழ்க்கை நினைவாய் மாறுது !
கனவையும் , நினைவையும் தோற்கடித்து வாழ நினைக்கும் போது தான் 
ஏனோ,
வாழ்க்கை என்னை ஏமாற்றுகிறது ?
வாழ்வில் தோல்வி என்றோ ஒரு நாள் வெற்றியாய் மாறும் !
வாழ்வில் ஏமாற்றம் என்றுமே தோல்வியாய் மாறாது !!!?

Wednesday 23 May 2018

புகையிலை !!!

ஏனோ இருள் என்னை மட்டும் சூழ்வதாய் இருக்கிறது .
கண் இமைக்குள் இருக்கும் என் கருவிழியை
தேடியவாறே பயணிக்கிறேன். பாதை மறந்தவனாய் ,
சில நிமிடங்கள் உன் தலை முடிகளில் ஒரு முடி மட்டும் என் கழுத்தை இருக்க துடிக்கிறதே ! .
அந்த நிமிடம் என் விரல்கள் உன் கன்னத்தை வருட முயற்சிக்கிறதே ஏன் ?
பல வார்த்தைகள் மனதில் சுழல ,
வாழ்க்கைக்கான வார்த்தைகளை கண்டறிய
உருவமில்லா உன்னை
தேடுகிறதே என் மனம் !
சில சமயம் நினைவுகள் என்னை
கொலை செய்ய முயற்சிக்கும் போது
உன் ஒளிக்கொண்ட புகை
உடலை மட்டும் சொர்கத்திற்கு அருகில் கொண்டு செல்கிறதே
என் உயிரை விட்டு !
என் சொர்கத்தில் நான் மட்டும் தனியே சிரிக்கிறேன் துணையாக வா !
அவள் விட்டு சென்ற வெற்றிடம் , உன்னால் வெற்றி காணட்டும் !!!
என்னால் முடிந்தவரை சுவாசிக்கிறேன் !
என் கண் கருவிழி மறையும் வரை !!!
உனக்காக துடித்த என் இதயம் இனி ஆசுவாசப்படும் வரை ..
அனுமதியுடன் உன்னை வருட நினைத்த என் விரல்களின்
வலிமை குறையும் வரை !
உன் நினைவுகளின் சவம் எரியம் போது இறுதியாய் அணைப்பேன்
என் சுவாசத்தை !!

Tuesday 22 May 2018

கைரேகை !!!

என் எண்ணங்களுக்கு பசியாற்றிய
உன் நினைவுகள் எங்கே ?
என் நிஜத்துடன் பயணித்த
உன் நிழலின் வழி தடங்கள் எங்கே ?
என் இதய துடிப்பிற்கு
நீ கற்பித்த மொழிகள் எங்கே ?
என் கண்களுக்கு விருந்தாக்கிய
உன் நிர்வாண பார்வை எங்கே ?
என் உடலில் வியர்வை துளிகளை வரவழைத்த
உன் சித்து விளையாட்டிகள் எங்கே ?
அந்த வியர்வை துளிகளை ரசித்து துடைத்த
உன் கைகள் எங்கே ?
என் இமைகளில் ஒளிந்திருக்கும்
உன் நினைவுகளின் பதிவுகள் எங்கே ?
அந்த பதிவுகளின் கடைசி பக்க கேள்விக்குறியை படித்தவுடன் புரிந்தது !
தவறு செய்தாயோ ?
தவறி செய்தாயோ ?
தெரியவில்லை...
உன் கை விரல்கள் என்னை கட்டி தழுவும் போது தெரியவில்லை ?
அந்த கையிலுள்ள ரேகையில் தான் என் தலை எழுத்து மறைந்திருக்கிறது என !!!!


Sunday 20 May 2018

ஒளி !!!

ஆழ்ந்த உரக்கத்தில் திடிரென 
தோன்றிய ஒளியை - பின்
தொடர்ந்து சென்றேன்.,
இமைகள் மூடிய அந்த
இருட்டில் தனியே - பழக்கமில்லா
ஒளியுடன் அந்த பயணம்...
பயண தொடக்கம் தெரிந்த
எனக்கு முடிவு - தெரியாத
நீண்ட பயணம் அது.,
எங்கே கடத்தி செல்கிறாய்
என அதிக சத்ததில்
ஒரு குரல்
குரலுக்கு சொந்தக்காரன் யார் ?
என்று பார்த்தால் என்
வாய் வழியே - வந்தது
அந்த குரல் என்னையும் மறந்து...
எந்த வினாவிற்கும் விடை
சொல்லாமல் சென்றது
அடையாளம் தெரியாத ஒளி...
பதட்டம் ஒரு பக்கம்
பயம் ஒரு பக்கம்
இருந்தாலும் பாதை - தெரியாத
விலாசமில்லாத ஒரு நீண்ட பயணம்...
தூரம் செல்ல செல்ல
ஒளியின் அடர்த்தி
குறைந்துக் கொண்டே சென்றது .
உடனே நின்ற ஒளி
அழகிய பெண் உருவமாய்
காட்சியளித்தது...!!!
ஆம் என் கற்பனையில்
வந்த அதே உருவம்,
வியப்புடன் அருகில்
சென்று பார்த்தேன்,
நான் பார்ப்பது தெரிந்து
அந்த ஒளிக் கொண்ட
பெண் தன்னை நிர்வாணம்
படுத்த ஆரம்பித்தாள்.,
பொறுமையை இழந்தவனாய்!!
அந்தநொடி அவளின் நிர்வாணத்தை
கற்பனை செய்த படியே
மயங்கி விழுந்தேன்...!!
அவள் கை என் மேல் வருடியவாரு தெரிந்தது ,,,,!!!
இருட்டு அறையில்
சிறைப்பட்டு போன
என் உடலை
வெளிச்சம் தந்து
அதே வெளிச்சத்தில்
கட்டி அணைத்து
என்னை சம்பலாக
கறைய விட்டாள் காற்றில்
சுதந்திரமாக...!!!

Friday 18 May 2018

மயனாம் !!!

ஆதரவின்றி வளர்ந்த மரங்கள் !
ஆற்று நீர் அமைதியாக புரண்டோடும் சத்தம் !
அனாதையாக வளர்ந்த அந்த குயிலின் இசை ! 
கும் இருட்டில் மறைந்து விளையாடும் மின்மினி பூச்சிகளின் வெளிச்சம் !
கணிக்க முடியாத ஓசையில் கடந்து சொல்லும் காற்று !
இறப்பதிற்கு முன் ஒரு முறையாவது தூங்க வேண்டும்
மயானத்தில் !
சொல்லமுடியாத சொர்க்கம் !
விவரிக்க முடியாத இன்பம் !
கற்றுதரப்படாத சுகம் !
கற்பிக்கமுடியாத ஆனந்தம் !

Monday 14 May 2018

முதல் காதல் !!!

கடல் தாண்டி பாதை அமைத்து !
பூமிக்கடியில் வாசல் வைத்து !
சூரியனுக்கு பின் ஜன்னல் அமைத்து !
சீறும் அலைகளில் அவளுக்கு மெத்தை செய்து !
மேகங்களில் மறைந்திருக்கும் ,
மழை துளிகளை காவல் வைத்து !
கண்ணீல் படாத காற்றால் ,
காதல் கடிதம் எழுதி !
நிலவென அவளுக்கு செல்ல பெயர் வைத்தவுடன்,
இயற்கை அவள் மேல் பொறாமைக் கொள்ள !
அவளுடன் ஒரு நாள், ஒரு இரவு நான் தூங்க ,
அந்த சூரியனை கொலை செய்தேன் .
இரவில் என்னை அடையாளம் காண
நிலவாக அவள் மாற !
ஓர் இரவு கூட அவளுடன் தூக்கம் இல்லா சிவராத்திரியே !
கோபத்தில் என் கண்கள் சிவக்க !
" வெட்கப்பட்ட அவள் ''
அரை முகத்துடன் ,என்னை ரசிக்க !
என் நிலா வெட்கப்பட்ட ,அந்நாள் பெளர்ணமியோ ,
அளவில்லா அவள் காதல், அட்சயப் பாத்திரமாக மாற ,
இறுதியில் ,கழுவி கவுத்தால் அவள் திருமண மண்டபத்தில் !!!!!!
காதல் பசியால் இயற்கையுடன் நான் ?

Sunday 13 May 2018

ஆலமர விழுது !!

சிறு வயது ஆலமரத்து
விளையாட்டு,
விழுதுகளின் கை பிடிக்க
என் தோல் மீது ஏணி செய்து உன் கால் வைத்து, விழுதில் நீ தொங்கிவிளையாட ,உன் கால் தடம் தோலில் பதிய”அச்சசோ” என தடம் பதிந்த இடத்தில் உன் புதிய பட்டு பாவாடையின் சிறு துண்டை கிழித்து
தடம் மறைக்க நீ துடைத்து , உன்னால் ஏற்பட்ட என் அடையாளம் மறைந்து ,என்னால் கிழிந்த உன் பாவாடை மறுநாள் உன் வீட்டு குப்பையில் இருக்க , தேடி சென்று சேகரித்தேன் காரணம் இல்லாமல் .
உன் எச்சில் பட்ட சாப்பாட்டை நீ பகிர, நிரந்தர பசி உள்ளவனாய் நான் நடிக்க, உன் அழுகு கையால், என் அழுக்கு கைக்கு சாப்பாடு பரிமாரியதும், உன் ஒரு கை உணவாள் என் வாழ்நாள் வாழ்க்கையை நான் வாழ்ந்திடுவேனோ ! என நான் நினைத்தேன் காரணமில்லாமல் ...
நீ பருவமடைந்த பின் உன் சடங்கு நிகழ்ச்சியில் நீ உபயோகித்த பூக்களின் வாசம் எல்லாம் வீணாய் போய்விடுமோ என்ற அச்சத்தில், அனைத்து பூக்களையும் சேகரித்து தலையனை செய்து தூங்கினேன் காரணம் இல்லாமல் ...
உன்னிடம் தனியாய் பேச வெட்க்கப்பட்டு , எப்படி பேச வேண்டுமென பலமுறை ஒத்திகை பார்த்தேன் நம் விளையாடி பொழுதை கழித்த அந்த ஆலமரத்திடம் காரணம் இல்லாமல்....
உன்னை தனியாய் வரவழைத்து என் காதலை சொல்ல முற்பட்ட போது , அவள் பிரிவை தாங்கும் சக்தி உன்னிடம் உள்ளதா என பரிசோதித்து பார்க்க சொன்ன ஆலமரத்திடம் கோபமாய் பேசி பிரிந்தேன் காரணமில்லாமல்..
.
நாம் சிறுவயது முதல் சிரித்துபேசி பழகிய ஆலமரத்தின் நிழல் வெறுத்து நம் சந்திக்கும் இடம் மாற்றி நம் நினைவுகளை பல இடங்களில் பதிவு செய்தேன் காரணமில்லாமல்....
நம் நினைவுகளின் பதிவுகளை சேமிக்க இடமில்லாமல் உன்னிடம் நிரந்தரமான நிஜ வாழ்க்கையில் பயனிக்க ஆசைப்பட்டேன் காரணமில்லாமல்.....
பயன தொடக்கத்தில் நீ காத்திருக்க சொன்ன ஆலமரத்திடம் சமாதனாம் பேசியபடி விடைபெறுகிறோம் என சொல்லிக்கொண்டிருக்க ,
பதில் பேசா, ஆலமரம் மெளனம் காத்தது என்னிடம் காரணமில்லாமல்......
காலங்கள் உருண்டோட நினைவுகளை நிஜமாக்க நான் மட்டும் அவள் வருகைக்காகக் காத்திருக்க , அதே மெளனத்துடன் விழுதுகள் கூட அசையாமல் இருந்தது ஆலமரம் ......
இறுதியாய் பேசிய ஆலமரம் அவள் பிரிவை தாங்கும் சக்தி உன்னிடம் உள்ளதா என மீண்டும் மீண்டும் கேட்க , ஆத்திரம் அடைந்த நான் அவள் நினைவாய் இருந்த பட்டு பாவடையில் தூக்கிட்டு தொங்கி நிறுபித்தேன் ,
பிரிவை தாங்கும் சக்தி உள்ளதென....
அதன் பின்பு தான் தெரிந்தது என்னை விட என்னவளை ஆலமரம் அழகாய் புரிந்து வைத்துள்ளது என !
காலங்கள் உருண்டோட !!
ஆலமர விழுதோடு விழுதாய் நான் தொங்க , என் கை பிடித்து விளையாடியது என் அவள் குழந்தை !
விழுதுகளில் விழுதாய் நான் ????

Friday 11 May 2018

தந்தையின் காதல் !!!

கருவறை இருட்டிலிருந்து , கல்லறை இருட்டு வரை உள்ள தூரம் 
தானம்மா வாழ்க்கை !
நீ பிறந்த தேதியை தான் என் வாழ்நாளில் நான் மோட்சம் பெற்ற தினமாக நினைக்கிறேன் !
வெறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டு தேய்ந்த என் காதுகளுக்கு ,
உன் கால் கொலுசின் இசை கேட்ககையில் என் தாயின் தாலாட்டு
பாடல் நினைவுக்கு வந்ததம்மா !
பல் முளைக்கா உன் மழலை சிரிப்பால் , என் நீண்ட கால் உழைப்பின் வேர்வை துளிகள், காணல் நீராய் மறைந்ததம்மா !
நீ நடைப்பழகும் போது உன் தூக்கக்கலக்கத்தில் என் மார்பின் மீது தூங்குவாயே , அச்சமயம் உணர்ந்தேன் ,
என் தாயின் கருவறையின் சுகமான சுமையை !
உன் தலையை அலங்கரித்த அந்த முதல் ரோஜா ,
இன்று நம் வீட்டின் பின்னால் பூ தோட்டமாக !
நீ பூ புடைந்து , அந்த சிறு குடிசைக்குள் ஒளிந்திருந்த
பதினேறு நாட்கள் , என் தாயின் சிறு வயது வெட்கத்தை
உன் முகத்தில் பார்த்தேன் தாயே !
உன் கல்வி அறிவால் எனக்கு ஆலோசனைகள் சொல்லும் போது
என் ஆசான் நீ அம்மா !
என் பரம்பரையின் தெய்வமம்மா நீ !
என் சொந்தங்களின் குலவிளக்கம்மா நீ !
உன் கால் தரையில் படாது வளர்த்த உன்னை திருமணம் என்ற பெயரால் உன்னை பிரிய மணமில்லையடி தாயே !
நீ தாய்மையடைய தகுதியான ஆளை எங்கேயம்மா நான் தேடுவேன் ?
வருபவன் உன் கணவனாக மட்டும் இல்லாமல் , மாற்று தந்தையாகவும் இருப்பானா ? என்பது சந்தேகமே !
பல தேர்வுகளுக்கு பின்னால் , சரிவரும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மகன்
ஏற்றுக்கொள் தாயே !
உன் தற்கொலை முயற்சியை கைவிட்டுவிடு ...
உன் காதலை கைகழுவிவிடு …
உன் ஏழை காதலனை ” கருனைகொலை செய்துவிடி “
உன் பெற்றோருக்காக !!!

Sunday 6 May 2018

விதி !!!

அர்த்தமில்லா காதலுக்கும் 
அர்த்தமுல்ல திருமணத்திற்கும் விடை தெரியாத பூமியில் நாம் மட்டும்
விதிவிலக்கா ?
இங்கு கேள்விகள் விதைக்கப்பட்டு இருக்கின்றன ,
பதில்கள் அறுவடை செய்யப்படவில்லை ...
ஆசைகளை முதலிடாக்கும் போது ,
இன்பங்கள் நஷ்டமடைகிறது .
ஏடுகள் இல்லா காலத்தில் எழுதப்படா விதிகள் நம் தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்படுகிறது , உன் எதிர் பாலினத்தால் !
மன்னிப்பு என்ற வார்த்தையை இல்லையேல் , நாம் அனைவரும் இவ்வுலகில் சவம் தான் !!!
இங்கு விதிகள் என்பது பிறக்கப்படவில்லை ,
உருவாக்கப்படுகிறது அவரவர் தேவைகேற்ப !
ஆணோ , பெண்ணோ ஒரு முறை பழகி , ஒரு முறை பழுதாகி , ஒரு முறை மறந்தால் இன்பம் என்பது எளிதே !
வாழ்க்கை என்பது வார்த்தை விளையாட்டுகளே !
நம்பியவள் விளையாட தெரிந்தவள் !!!!
நம்பாதவன் விளையாட தெரியாதவன் ???


Friday 4 May 2018

ஹைக்கூ !!!

சொந்தமில்லா அனைத்தயும் ஆசைப்படும் கண்கள் !
ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகும் செவிகள் !
குறிப்பிட்ட அந்த வாசனையை மட்டும் சுவாசிக்க துடிக்கும் நாசி !
பழகிய அந்த வார்த்தைகளை அடிக்கடி உச்சரிக்க துடிக்கும் நா !
சொந்தமில்லாத துடிப்பிற்கு சொந்தம் கொண்டாடும் இதயம் !
நிரந்தரமில்லா உயிரை சுமந்து வாழும் , உடல் !
ஒரு நாள் நிச்சயமாக இவ்வுலகில் நிரந்தரமாக இருக்கும் , ஏமாற்றம் என்ற வார்த்தையை ஒரு நாள் நம்பும் !!!

Wednesday 2 May 2018

இலவசம் !!!


காதல் இலவசம் என்ற அவள் வார்த்தையை நம்பிய
ஏழை, காதலில் பயணித்தான் !
சுகமான அவளிடம் கிடைத்த பாசம் இலவசம் !
அழகான அவளிடம் கிடைத்த அக்கறை இலவசம் !
நாடகமாக அவளிடம் கிடைத்த சண்டை இலவசம் !
கனவிலும் அவளிடம் கிடைக்கும் ஊடல் இலவசம் !
காதலின் பதவி உயர்வான திருமண வாழ்க்கையை நோக்கி
பயணம் செய்ய நினைக்கும் போது தான் தெரிந்தது !
ஏழைக்கு திருமண வாழ்க்கை இலவசம் இல்லை என ?

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....