Sunday, 13 May 2018

ஆலமர விழுது !!

சிறு வயது ஆலமரத்து
விளையாட்டு,
விழுதுகளின் கை பிடிக்க
என் தோல் மீது ஏணி செய்து உன் கால் வைத்து, விழுதில் நீ தொங்கிவிளையாட ,உன் கால் தடம் தோலில் பதிய”அச்சசோ” என தடம் பதிந்த இடத்தில் உன் புதிய பட்டு பாவாடையின் சிறு துண்டை கிழித்து
தடம் மறைக்க நீ துடைத்து , உன்னால் ஏற்பட்ட என் அடையாளம் மறைந்து ,என்னால் கிழிந்த உன் பாவாடை மறுநாள் உன் வீட்டு குப்பையில் இருக்க , தேடி சென்று சேகரித்தேன் காரணம் இல்லாமல் .
உன் எச்சில் பட்ட சாப்பாட்டை நீ பகிர, நிரந்தர பசி உள்ளவனாய் நான் நடிக்க, உன் அழுகு கையால், என் அழுக்கு கைக்கு சாப்பாடு பரிமாரியதும், உன் ஒரு கை உணவாள் என் வாழ்நாள் வாழ்க்கையை நான் வாழ்ந்திடுவேனோ ! என நான் நினைத்தேன் காரணமில்லாமல் ...
நீ பருவமடைந்த பின் உன் சடங்கு நிகழ்ச்சியில் நீ உபயோகித்த பூக்களின் வாசம் எல்லாம் வீணாய் போய்விடுமோ என்ற அச்சத்தில், அனைத்து பூக்களையும் சேகரித்து தலையனை செய்து தூங்கினேன் காரணம் இல்லாமல் ...
உன்னிடம் தனியாய் பேச வெட்க்கப்பட்டு , எப்படி பேச வேண்டுமென பலமுறை ஒத்திகை பார்த்தேன் நம் விளையாடி பொழுதை கழித்த அந்த ஆலமரத்திடம் காரணம் இல்லாமல்....
உன்னை தனியாய் வரவழைத்து என் காதலை சொல்ல முற்பட்ட போது , அவள் பிரிவை தாங்கும் சக்தி உன்னிடம் உள்ளதா என பரிசோதித்து பார்க்க சொன்ன ஆலமரத்திடம் கோபமாய் பேசி பிரிந்தேன் காரணமில்லாமல்..
.
நாம் சிறுவயது முதல் சிரித்துபேசி பழகிய ஆலமரத்தின் நிழல் வெறுத்து நம் சந்திக்கும் இடம் மாற்றி நம் நினைவுகளை பல இடங்களில் பதிவு செய்தேன் காரணமில்லாமல்....
நம் நினைவுகளின் பதிவுகளை சேமிக்க இடமில்லாமல் உன்னிடம் நிரந்தரமான நிஜ வாழ்க்கையில் பயனிக்க ஆசைப்பட்டேன் காரணமில்லாமல்.....
பயன தொடக்கத்தில் நீ காத்திருக்க சொன்ன ஆலமரத்திடம் சமாதனாம் பேசியபடி விடைபெறுகிறோம் என சொல்லிக்கொண்டிருக்க ,
பதில் பேசா, ஆலமரம் மெளனம் காத்தது என்னிடம் காரணமில்லாமல்......
காலங்கள் உருண்டோட நினைவுகளை நிஜமாக்க நான் மட்டும் அவள் வருகைக்காகக் காத்திருக்க , அதே மெளனத்துடன் விழுதுகள் கூட அசையாமல் இருந்தது ஆலமரம் ......
இறுதியாய் பேசிய ஆலமரம் அவள் பிரிவை தாங்கும் சக்தி உன்னிடம் உள்ளதா என மீண்டும் மீண்டும் கேட்க , ஆத்திரம் அடைந்த நான் அவள் நினைவாய் இருந்த பட்டு பாவடையில் தூக்கிட்டு தொங்கி நிறுபித்தேன் ,
பிரிவை தாங்கும் சக்தி உள்ளதென....
அதன் பின்பு தான் தெரிந்தது என்னை விட என்னவளை ஆலமரம் அழகாய் புரிந்து வைத்துள்ளது என !
காலங்கள் உருண்டோட !!
ஆலமர விழுதோடு விழுதாய் நான் தொங்க , என் கை பிடித்து விளையாடியது என் அவள் குழந்தை !
விழுதுகளில் விழுதாய் நான் ????

No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....