Friday, 11 May 2018

தந்தையின் காதல் !!!

கருவறை இருட்டிலிருந்து , கல்லறை இருட்டு வரை உள்ள தூரம் 
தானம்மா வாழ்க்கை !
நீ பிறந்த தேதியை தான் என் வாழ்நாளில் நான் மோட்சம் பெற்ற தினமாக நினைக்கிறேன் !
வெறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டு தேய்ந்த என் காதுகளுக்கு ,
உன் கால் கொலுசின் இசை கேட்ககையில் என் தாயின் தாலாட்டு
பாடல் நினைவுக்கு வந்ததம்மா !
பல் முளைக்கா உன் மழலை சிரிப்பால் , என் நீண்ட கால் உழைப்பின் வேர்வை துளிகள், காணல் நீராய் மறைந்ததம்மா !
நீ நடைப்பழகும் போது உன் தூக்கக்கலக்கத்தில் என் மார்பின் மீது தூங்குவாயே , அச்சமயம் உணர்ந்தேன் ,
என் தாயின் கருவறையின் சுகமான சுமையை !
உன் தலையை அலங்கரித்த அந்த முதல் ரோஜா ,
இன்று நம் வீட்டின் பின்னால் பூ தோட்டமாக !
நீ பூ புடைந்து , அந்த சிறு குடிசைக்குள் ஒளிந்திருந்த
பதினேறு நாட்கள் , என் தாயின் சிறு வயது வெட்கத்தை
உன் முகத்தில் பார்த்தேன் தாயே !
உன் கல்வி அறிவால் எனக்கு ஆலோசனைகள் சொல்லும் போது
என் ஆசான் நீ அம்மா !
என் பரம்பரையின் தெய்வமம்மா நீ !
என் சொந்தங்களின் குலவிளக்கம்மா நீ !
உன் கால் தரையில் படாது வளர்த்த உன்னை திருமணம் என்ற பெயரால் உன்னை பிரிய மணமில்லையடி தாயே !
நீ தாய்மையடைய தகுதியான ஆளை எங்கேயம்மா நான் தேடுவேன் ?
வருபவன் உன் கணவனாக மட்டும் இல்லாமல் , மாற்று தந்தையாகவும் இருப்பானா ? என்பது சந்தேகமே !
பல தேர்வுகளுக்கு பின்னால் , சரிவரும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மகன்
ஏற்றுக்கொள் தாயே !
உன் தற்கொலை முயற்சியை கைவிட்டுவிடு ...
உன் காதலை கைகழுவிவிடு …
உன் ஏழை காதலனை ” கருனைகொலை செய்துவிடி “
உன் பெற்றோருக்காக !!!

No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....