ஏதோ ஒரு இருளில் , சில உஷ்ணங்கள் கலந்த , மெளன மொழியின் மந்திர சொற்களால் உண்டான பிழை , நீ என்பதை மட்டும் நினைவு கொள் !!!
உடல் முழுவதும் இரத்தமாய் , தசை முழுவதும் சிகப்பாய் பிறப்பிலேயே உன் மரணப் படுக்கையின் வாசனையை சுவாசித்தவன் நீ என்பதை மறந்திடு !
புழுதிப் பறந்த புழுக்கத்தில் உண்டான சுவடு அது மறந்திடு !
சுற்றார் , உற்றார் , வாழ வழியின்றி உன்னை ஏமாற்ற கற்று தந்த பாதை அது , மறந்திடு !
கை சேர்ந்து நடப்பதும் , கை கோர்த்து சிரித்ததும் சந்தர்ப்ப சூழ்நிலையின் சாபம் என்பதை நீ மறந்திடு !
ஆசையோ , அன்போ , கோபமோ இது ஏதும் உண்மையில்லை , உன் வாழ்க்கை பொய் என்னும் பட்சத்தில் அனைத்தையும் மறந்திடு !
எல்லாம் தெரிந்த உலகில் , ஏதும் அறியா பாவத்தின் பகடை நீ ! மறந்திடு !
உன் கண்களின் தாகம் தான் உன் வாழ்க்கை எதிர்காலம் என்பதை மறந்திடு !
உயிர் உன்னை மறக்கும் முன்னே !
உயிர் உள்ள போதே நீ உன்னை மறந்திடு !!!
இவை எல்லாம் தெரிந்த
என் அன்பு ஆத்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!