Wednesday, 28 February 2018

உன் திருமணம் !!!

என் கழுத்தில் இருக்கும் மாலையால்
நீ வரும் பாதையை அலங்கரித்து ,
என் நெற்றிப்பொட்டு ரூபாயால் 
உன் சிகைக்கு பூ வாங்கி
என் கால் கட்டு நூலால் 
தாலி கோர்த்து
என் மேல் எரியும் நெருப்பை
ஹோமமாக்கி
வாய்க்கரிசியால் விருந்து சமைத்து ,
வா ! அன்பே உன் திருமணத்தை
என் சாமாதி மேல் பந்தல் அமைத்து
நடத்திக்கொள் வா !!!!

Tuesday, 27 February 2018

ஏனோ ? யாரோ !

ஏமாற்றம் என்பது அனுபவம் தான் என நினைத்தது ஏனோ ?
ஏழை மனம் ஏமாற்றம் காண்பது தான் என சொன்னது யாரோ !

காலமே பாடம் என நினைத்தது ஏனோ ?
எத்தனை முறை கற்பழித்தாலும் ஏழை மனம் ஊமை தான் என
சொன்னது யாரோ ! 


இறைவன் கொடுத்த பாலை நஞ்சாக்கி எனக்கு கொடுப்பதன் காரணம் ஏனோ ?
காரணம் நான் அறியும் முன்பாக விடை பெற சொன்னது யாரோ !


விருப்பமில்லா உறவிற்கு உன் ஆதரவு ஏனோ ?
விரும்பிய உறவிற்கு கண்ணீரை பரிசாக தர சொன்னது யாரோ !


உன் தாகத்திற்கு என் கண்ணீர் ஏனோ ?
தாகம் தணியா நிலையில் என் இரத்தம் கேட்க சொன்னது யாரோ ! 


நீ உடன் இருக்கும்போது நம் உறவிற்கு பெயர் வைக்காதது ஏனோ?
வைக்காத பெயரை அழிக்க சொன்னது யாரோ !


பணமில்லா இடத்தில் நினைவிலும்
பணமுள்ள இடத்தில் நிஜத்திலும் வாழ சொன்னது யாரோ !


உன் மகனிடம் நம் இரகசியத்தை தவறாக சொல்லி விடாதே
உண்மை தெரிந்தே பிறப்பேன் உன் மடியில் தவழ !!!!!!!!!!!

Sunday, 25 February 2018

வாழ்க்கை !!!

அரையடியில் வெளியேறி ,
ஒரு அடியில் மடியில் படித்துறங்கி,
இரண்டடியில் தவழ துவங்கி ,
மூன்றடியில் நடை பழகி,
நான்கடியில் நம்பிக்கைப் பெற்று ,
ஐந்தடியில் நிர்வாணமாகி,
ஆறடியில் தனிமையில் நிம்மதியான நினைவுகளுடன் நிரந்தர உறக்கம் கிடைப்பது ...
அழகான வாழ்க்கை !!!!

அவள் வரும் பாதையை நோக்கி !!!

அவளின் வாசம் தேடி சென்ற என் சுவாசம் !
அவளின் பார்வை தேடி சென்ற என் கண்கள் !
அவளின் குரலை தேடி சென்ற என் வார்த்தைகள் !
அவளின் உணர்வுகளை தேடி சென்ற என் உணர்ச்சிகள் !
அவளின் தேகம் தேடி சென்ற என் விரல்கள் !
அவளின் வியர்வையை துடைக்க சென்ற என் நா !
அவளின் முகவரியை தேடி சென்ற என் மொத்த உடலும் ஏமாா்ந்து
சொன்னது ,
அவள் விலைமதிப்பில்லா உயரத்தில் , இறந்த காலத்தை மறந்து , நிகழ்கால எதிர்பார்ப்புக்கு விடையளித்தபடி நகர்கிறாள் என்று !!! விடையில்லா வினாத்தாளாக விடைக்காக காத்திருக்கிறேன் ?
எழுத அவள் வரும் பாதையை நோக்கி !!!!

Saturday, 24 February 2018

ஹைக்கூ !!!

நீ காணாமல் போன அந்த நொடியிலிருந்து 
ஆரம்பித்த என் மன உதிரப்போக்கு ,
உன் மாத உதிரப்போக்கை விட வலி அதிகம்.
நம் பருவமடைந்த காலத்திலிருந்து இருவரும் கைக்கோர்த்து நடந்துள்ளோம்.
இன்றும் உன் உரையாடல் காற்றில் கரைந்து
சத்தம் இல்லாமல் உன்னை நினைவுபடித்துக்கொண்டே உள்ளது.
நீஜ உலகில் நீ காணாமல் சென்றாலும்
கனவுலகில் இன்றும் என்னுடன் வாழ்ந்துக் கொண்டுருக்கிறாய்,
உன்னால் என் தூக்கம் கலையும் வரை
உனக்காக கனவுலகில் காத்திருப்பேன் !
விழி திறவாமல் !

Wednesday, 21 February 2018

என்னுள் நான்

இரவில் என் நிம்மதியை தேடி சென்றுக்கொண்டிருந்தேன்.
வழியில் என் எதிரே வந்த ஆன்மா எங்கு செல்கிறாய் என கேட்க,
நிம்மதியை தேடி என்றேன்.
கேட்ட ஆன்மா சத்துடன் சிரித்தது ,
கோபத்துடன் ஆன்மாவை கடந்து சென்றேன்.
அருகில் வந்த ஆன்மா
உன் உடல் அருகில் உன் நம்பிக்கையும் , ஆசையையும் புதைத்து விட்டு வா ,
என்னை போல் நீயும் நிம்மதியாய் இருப்பாய் என்றது.
இவைகள் தானே வாழ்க்கை என்று ஆன்மாவை பார்த்து நான் சிரித்தேன் சத்தமாக ,
அருகில் வந்த ஆன்மா
நீ நிஜமில்லை , எனக்கு நிழலில்லை
என சொல்லி மறைந்தது !!!

Tuesday, 20 February 2018

நாளைய பொழுது !!!

வாழ்க்கை நேற்று , இன்று, நாளையேன நகர
நான் மட்டும் நேற்றோடு நின்றேன்?
உன் வார்த்தையில்லா நாளைய பொழுது ?
உன் உருவமில்லா நாளைய பொழுது ?
உன் நிழலில்லா நாளைய பொழுது ?
உன் புரிதலில்லா நாளைய பொழுது ?
உன் தேடலில்லா நாளைய பொழுது ?
உன் கோபமில்லா நாளைய பொழுது ?
உன் சுவையில்லா நாளைய பொழுது ?
உன் வாசமில்லா நாளைய பொழுது ?
உன் அன்பில்லா நாளைய பொழுது ?
உன் அரவனைபில்லா நாளைய பொழுது ?
உன் பாதுகாப்பில்லா நாளைய பொழுதை சந்திக்க நான் தயாராகவில்லை !
இன்றோடு நிற்கிறேன், நாளை விடியும் பொழுதை உன் கைப்பிடித்து கடக்கும் வரை காத்திருப்பேன் !!!

Monday, 19 February 2018

அவள் வேண்டும் !!!

அவள் வேண்டும் என் உருவத்தை காண , 
கண் இல்லாமல் அவள் வேண்டும் !
என் சொற்களை கேட்க , 
செவி இல்லாமல் அவள் வேண்டும் !
என்னிடம் பேச மொழி இல்லாமல் ,
அவள் வேண்டும் !
என் உணர்வை புரிந்துக்கொள்ள ,
 உணர்வே இல்லாமல் அவள் வேண்டும் !
என் பசியை பழிவாங்க அவள் வேண்டும் !
நான் துளைத்த தூக்கத்தை தேட அவள் வேண்டும் !
அவளின் நிம்மதியான தூக்கத்திற்க்கு ,
 என்னை நிரந்தரமாக தூங்க வைத்த அவள் வேண்டும் !
என் விதியை மதியால் மாற்றி , அந்த மதியை என்னிடமிருந்து கலவாடிய அவள் வேண்டும் !
எனக்கு பறக்க கற்று தந்து என் இறகுகளை பிடிங்கி சென்ற அவள் வேண்டும் !
என் இதய துடிப்பில் அவள் பெயரை உச்சரிக்க செய்து, அவளுக்காகவே துடிக்க செய்த அவள் வேண்டும் !
அவள் வருகைக்காக ,அந்த சூரியனை சிறை பிடித்து, நட்சத்திரங்களை மாலையாக்கி ,வானை பாதையாக்கி , என் நிலவை கான , இயற்கையோடு காத்திருக்கிறேன் ?
அவள் வேண்டும் !!!!!

Sunday, 18 February 2018

அவள் !!!

வண்ணங்கள் அதிகம் இல்லா அவள் முகமோ!
ஆபரணங்கள் அதிகமில்லாத அவள் உடலோ !
அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய அவள் கண்களோ !
அந்த மொழிகளை என்னிடம் விளக்கி சொல்ல நினைக்கும் அவள் புருவங்களோ !
என் உடலை அலங்கரிக்க காத்திருக்கும் அவள் உதடுகளோ !
விலை மதிப்பிலா ரத்தினங்களால் மெருகேரிய அவள் கன்னங்களோ !
முகம் பாதி , அந்த கன்னங்கள் மேல் கொஞ்சி விளையாடும் அவள் சிகை அலங்காரமோ !
என்றுமே இந்த பிறவி குருடனின் கற்பனையில் அவள் அழகு தான் !!!

Friday, 16 February 2018

ஹைக்கூ !!!

நிறைந்த அமாவாசையில் துளைந்த என் நிலாவை தேடிக்கொண்டிருக்கிறேன் , நான் இறந்தவன் , என்பதை மறந்து !!!!

Wednesday, 14 February 2018

பரிசு !!!

காதலர் தின பரிசாக நான் கொடுத்த மலர்கள் 
அவள் முதல் இரவு படுக்கையை இவ்வளவு அழகாக அலங்கரிக்குமென 
நான் எதிர்பார்க்கவே இல்லை !!!

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....