Friday, 2 March 2018

என்னுள் நான் ?

விஷ பாட்டில் ?

மன விரக்தியில் தற்கொலை செய்ய முடிவு செய்த அனாதை, தான் சேமித்த பணத்தில் விஷம் வாங்கிக்கொண்டு வழக்கமாக உறங்கும் குப்பைமேட்டின் அருகிலுள்ள ஆலமரத்தை நோக்கி நடந்தான்...
தற்கொலைக்கு முன்பு அவனுக்கான கிழிந்த பாயில் தன் ஞாபகங்களை நினைவு படுத்தியபடி அமர்ந்திருந்தான். அவன் இருக்கும் இடத்தில் உருண்டு ஓடி வந்த இரண்டு ஆப்பிள் பழங்களை கையில் எடுத்தவாறு, பழங்கள் வந்த திசையை நோக்கி பார்த்தான், எதிரே நடந்த விபத்தில் பெண் ஒருத்தி நினைவில்லாமல் விழுந்திருந்தாள், தான் தற்கொலை செய்ய போவதையும் மறந்து விஷ பாட்டிலை பத்திரப்படித்தியபடி அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றான்.
மயக்கத்தில் இருந்த பெண், அனாதை கையில் வைத்திருந்த விஷ பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டு, அவசர சிகிச்சை பிரிவின் உள் சென்றாள்...!!!
விஷ பாட்டிலை தேடி கையில் எடுத்த படி, அந்த பெண்ணின் நிலை கண்ட பின், இறந்து விடலாம் என வெளியில் அமர்ந்திருந்தான்.
மருத்துவர் வெளியே வந்த போது, பாவம்! அந்த பெண் பிறவி பார்வை இழந்தவள், அவள் உடல் நலத்துடன் இருக்கிறாள் என சொல்லி நகர்ந்தார். சற்று புத்திசாலியாக யோசித்த அவன் மண் தின்னும் உடல் தானே கண்ணை இவளுக்கு கொடுத்துவிடாலம் என மருத்துவரிடம் சொல்லி சிகிச்சைக்கு தயாரானான். சிகிச்சை வெற்றிகரமா நடந்து கண் வந்த பெண் தன் உறவுகளை தேடி ஓட ! பார்வை இழந்த அனாதை மீண்டும் விஷ பாட்டிலைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் எப்படி இறப்பது என தெரியாமல்...

No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....