Wednesday, 4 July 2018

தூக்கம் !!!

அன்றிரவிலிருந்து தூக்கம் மட்டும் எதிரியாகிக் கொண்டே இருந்தது !
நாளை மாறும் , நாளை மறுநாள் மாறும் என்ற நினைப்பு யதார்த்தமானாலும் , நிஜத்தில் இவைகள் மறுக்கப்பட்டவையாகவே இருந்தது !
கனவில் வாழ்பவனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பது அன்றிலிருந்து தான் தெரிய ஆரம்பித்தது !
வாழ்க்கை கனவில் மட்டும் இருப்பதும் ,கனவாய் மட்டும் இருப்பதும் அன்றிரவு முதல் தினம் தினம் நினைவுப்படுத்தியே இருந்தது !
யாருடைய அனுமதியும் இல்லை , யாரிடமும் அனுமதி கேட்க்கவும் இல்லை, உன் அனுமதியுடன் உன் சிகை என் தோல் சாய்ந்த அந்த இரவு !
உன் சிகையிலிருந்து வரும் உன்னை என்னிடம் அறிமுகம் செய்த அந்த வாசனையை மட்டும் நான் சுவாசித்த அந்த இரவு !
விழி திறந்த உன் முதிர்ந்த பார்வையில் நான் முழ்கிய அந்த இரவு !
உன் தோல் சாயும் போது தோழியாகவும் , மடி சாய்கையில் மனைவியாகவும் , கோபத்தில் நண்பனாகவும் , நீ இருப்பாயா ? என்ற சந்தேகப்பார்வையை உன் மேல் நான் செலுத்திய அந்த இரவு !
என் விரல் தீண்ட , உன் அனுமதிக் கேட்க பரிதவித்த என் உதடுகள் பேச நினைக்கும் மெளன மொழிகளை , கண்டும் காணாததுப் போல் நீ இருந்த அந்த இரவு !
அனுமதிக் கேட்க நீ இன்று உன்னுடையவன் இல்லை , என்றும் நீ என்னுடையவன் . அனுமதில்லாமல் எடுத்துக்கொள் , நான் உன்னுடையவள் என்ற உன் சிரிப்பால் , சைகை தந்த அந்த இரவு !
பயத்தை மறைத்து , பதட்டத்துடன் உன் அருகில் நெருங்கிய அந்த இரவு !
சிரித்தவாறு என் கனனத்தை கிள்ளிவிட்டு விலிகி சென்றாள் உன்னை போல் ஒரு பொழுது போக்காளன் யாருமில்லை , இதற்கு பின் நான் பார்க்கபோவதும் இல்லை என்று !
கண் விழித்து பார்த்தேன் என் கன்னத்தை கிள்ளிய அவளது தழும்புமில்லை . அவளின் சிகை என் மேல் விழுந்த தடயமுமில்லை .
கனவிலும் விலகி சென்றாள் , அனுமதி இல்லா என் தூக்கத்தை திருடி சென்ற காரணம் மட்டும் சொல்லாமல் ?
அன்று இரவிலிருந்து தூக்கம் மட்டும் எதிரியாகிக் கொண்டேயுள்ளது !!!

Show More Reactions

No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....