அது ஒரு அழகிய இடம்
குயில் கூவ, மயில் ஆட, மரங்கள் அசைய ,
அந்த காட்டு வழி பாதையில் போய் தேடினேன் ,
அங்கும் அவள் இல்லை !
வித விதமான சத்தத்தில், அசைந்தாடும்
அலைகள் அருகே, என்றாவது ஒரு நாள்
என்னை வந்தடையமாட்டாய, என காத்திருக்கும்
மணல் திட்டின் அருகே சென்று பார்த்தேன்,
அங்கும் அவள் இல்லை !
நிரந்தரமில்லாது ஓடிக்கொண்டே ,
தன் நிரந்தர இடத்தை தேடிக்கொண்டிருக்கும் ,
அந்த நதிகரை அருகே தேடிப் பார்த்தேன் ,
அங்கும் அவள் இல்லை !
வண்ணம் தீட்டிய வானம் ,
தன் வன்ணங்கள் பிரியும் தருவாயில், வரும்
கண்ணீரில் நினைந்த படியே தேடி
சென்றேன், அந்த நிழற்கொடையை நோக்கி
அங்கும் அவள் இல்லை !
வர்ணிக்க முடியா இருட்டு ,
அமைதியான இடம் ,
அனுமதியில்லாது உள் செல்ல முடியாது
அந்த அறைக்கு .
அங்கும் அவள் இல்லை
அங்கும் தேடினேன், இங்கும் தேடினேன் ,
எங்கும் அவள் இல்லை !
ஆனால், நான் தனியே தேடிய இடத்தில் எல்லாம்
அவள் ஜோடியாய் வந்து சென்ற
கால் தடம் மட்டும் பதிந்திருந்தது !!!
No comments:
Post a Comment