அன்று காதல் என்ற வார்த்தை
அவளுக்குத் தேவைப்பட்டது
தகுதி என்ற வார்த்தை தடையாக இருந்தது
நட்பு என்ற பாலம் தடையை மீறியது .
பழகியதிலேயே நான் சிறந்தவன் என்றாள் .
பழக்கத்திலே என்னை உடையவன் என்றாள் .
பழகிய பின் காதலன் என்றாள் .
பழக்கம் முடிந்த பின் உன்னை போல்
நல்லவன் யாரும் இல்லை என்றாள் .
கடைசியாக நேற்று,
இவர் தான் என் கணவர்
என சொல்லி முடித்தால் !!
No comments:
Post a Comment