அன்று என் முதல் இரவு ,
விளக்குகள் அனைத்து ,
”ஆனந்த வெளிச்சத்தில் குளிக்க
நான் தயாராகுகையில் ”
வெளியே நின்ற குடுகுடுப்புக்காரன்,
நல்ல காலம் புறக்குது , நல்ல காலம் புறக்குது ,
என சொல்லி கொண்டே சென்றான்.
அலறி எழுந்து வெளிச்சத்தில்
பார்த்தேன் ,,, அருகில் படுத்திருந்தவள்
காணவில்லை..
வெளியே தேட முயற்சித்தேன் ,
இன்று வரை என்னால் வெளியே
வரமுடியவில்லை . என் கல்லறையை
விட்டு !!!!
No comments:
Post a Comment