Thursday, 6 June 2019

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை"
அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் ….
எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது ..
அவள் படிக்கும் போது வந்த கண்ணீரில் மொத்த
கவிதையும் அழிந்தது !!!!!!!

Friday, 31 May 2019

நான் யார் ?


நான் யார் ?
பிறந்த காரணம் தெரியவில்லை ?
ஏன் பிறந்தேன் என்ற கேள்விக்கு பதிலில்லை .
உடன் இருப்பவர்கள் ,
இருந்தவர்கள் ,
இறந்தவர்கள்
யாவரும் பதில் சொல்லவில்லை  !
வந்த இடமும் , வாழ்ந்த இடமும்
நிரந்தரமில்லை !
செல்லும் இடமும் , சென்றுக் கொண்டிருக்கும்
இடமும் சொந்தமில்லை !
அர்த்தம் புரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும்
நான் பித்தனுமில்லை !!!

நான் யார் ?

  




















Wednesday, 13 February 2019

முதல் இரவு !!!

அன்று  என் முதல் இரவு ,
விளக்குகள் அனைத்து ,
”ஆனந்த வெளிச்சத்தில் குளிக்க
நான் தயாராகுகையில் ”

வெளியே நின்ற குடுகுடுப்புக்காரன்,
நல்ல காலம் புறக்குது , நல்ல காலம் புறக்குது ,
என சொல்லி கொண்டே சென்றான்.

அலறி எழுந்து வெளிச்சத்தில்
பார்த்தேன் ,,, அருகில் படுத்திருந்தவள்
காணவில்லை..

வெளியே தேட முயற்சித்தேன்  ,
இன்று வரை என்னால் வெளியே
வரமுடியவில்லை . என் கல்லறையை
விட்டு !!!!



Related image

காதலர் தினம் !!!


காதலர்  தினக் கொண்டாட்டத்தில்
கொலை செய்யப் படாமல்
தப்பித்த ,
"ரோஜா ஜோடி" ஒன்று அழாகா
தன் காதலர் தினத்தை
கொண்டாடியது
என் வீட்டில்
குப்பைக் கொட்டும் இடத்தில் !!!!


Image result for ரோஜா செடி

Monday, 17 December 2018

காட்சி பிழை !!!

ஏதோ ஒரு இருளில் , சில உஷ்ணங்கள் கலந்த , மெளன மொழியின் மந்திர சொற்களால் உண்டான பிழை , நீ என்பதை மட்டும் நினைவு கொள் !!!

உடல் முழுவதும் இரத்தமாய் , தசை முழுவதும் சிகப்பாய் பிறப்பிலேயே  உன் மரணப் படுக்கையின் வாசனையை சுவாசித்தவன் நீ என்பதை மறந்திடு !

புழுதிப் பறந்த புழுக்கத்தில் உண்டான சுவடு அது மறந்திடு !

சுற்றார் , உற்றார் , வாழ வழியின்றி உன்னை ஏமாற்ற  கற்று தந்த பாதை அது , மறந்திடு !

கை சேர்ந்து நடப்பதும் , கை கோர்த்து சிரித்ததும் சந்தர்ப்ப சூழ்நிலையின் சாபம்  என்பதை நீ மறந்திடு !

ஆசையோ , அன்போ , கோபமோ இது ஏதும் உண்மையில்லை  , உன் வாழ்க்கை பொய் என்னும் பட்சத்தில் அனைத்தையும் மறந்திடு !

எல்லாம் தெரிந்த உலகில் , ஏதும் அறியா பாவத்தின் பகடை நீ ! மறந்திடு !

உன் கண்களின் தாகம் தான் உன்  வாழ்க்கை எதிர்காலம் என்பதை மறந்திடு !

உயிர் உன்னை மறக்கும் முன்னே !
உயிர் உள்ள போதே நீ உன்னை  மறந்திடு !!!

இவை எல்லாம் தெரிந்த
என் அன்பு ஆத்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

Thursday, 29 November 2018

ஹைக்கூ !!!

உன் நினைவுகள் இல்லா  இடம் என்று ,
அங்கு சென்றேன் !
அந்த இடமும் என்னை ஏமாற்றியது !

மரணம் !!!

Tuesday, 23 October 2018

காமம் !!!


உச்ச கட்ட காமத்தில்
உன்னை நானும் பார்த்தேனடி!
மச்சமில்லா உன் உடலில்
நான் மிச்சம் வைத்த பாகங்கள் .
நித்தம் , நித்தம் நான் நினைக்கையில்
ஏனோ என் மனம் நடுங்குதடி
அலங்கரிக்கப்பட்ட  அழகை
சிதைக்க காமம் அழைக்குதடி,
அது எப்படி சிதைப்பதாகும்
உன் முழு சம்மதத்துடன் நான் முயல்வதினால் ,

மூச்சு காற்று திணறுமே !
கண்கள் நான்கும் பேசுமே !
உதடுகள் சுவாசிக்க தொடங்குமே !
தசைகள் இருக்க பின்னுமே !


இவை அனைத்தும் தொடங்கும் முன்னே
நாம் இருவரும் ஒரு முறையாவது பிறப்போமடி !!!






ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....