Saturday, 31 March 2018

ஏமாற்றம் !!!



என்னை யாராலும் 
ஏமாற்ற முடியாது
என்ற தலைகணத்திலிருந்த 
என்னை முதல் முறை
என் கண்கள் ஏமாற்றியதாம்!!!
கண்கள் ஏமாற்றும் முன்னே
என் செவிகள்
என்னை ஏமாற்ற தொடங்கியதாம்!!!
ஏமாற்றத்தை தெரிந்துக்கொண்ட
நாக்கு சண்டையிட்டதாம்
சண்டை பெரியதாக
சாமாதானம் செய்ய
வந்த மூளை
இதயத்திடம் உதவி கேட்டதாம்!!!
இதயமோ இவர்களை
நம்பி தான்
நான் தொலைந்தேன்...
தற்போது தொலைந்ததை
மறந்து தொலைந்தவளை
தேடிக் கொண்டிருக்கிறேன் என்றதாம்!!!
சுதாரித்துக் கொண்ட
சுவாசம் நம்பிக்கை
மீது பழி சொன்னதாம்!!!
இறுதியில் நம்பிக்கை சொன்னதாம்
உன்னை ஏமாற்றியது
நான் இல்லை
நீ தான் என்று...!!!
ஆம் சத்தியமான உன்மை!!!!!!!
என்னை ஏமாற்றியது நான் தான் ????


Friday, 30 March 2018

விதை !!!


உன் நினைவாய் நீ கொடுத்த விதைகள் ,
நம் தோட்டத்து மண்ணில் புதைந்தவுடன்
மழை பெய்வதை நிறுத்த வேண்டியதின்
காரணம் ஏன் நிலவே ?
நீ பிரிந்த பின் காதலன் கண்ணீர் வீனாகாமல்
விதைகளுக்கு உயிராகட்டும் என என்னியது காரணம் ஏன் நிலவே ?
வளர்ந்த செடிகளை பாதுகாப்பாய் கண்ணாடி குவலைக்குல்,
நீ புதைக்க சொல்ல .
காற்றிள்ளா செடிகளுக்கு என் சுவாசம் தந்து வளர்க்க சொன்னதன் காரணம் ஏன் நிலவே ?
நினைவு வைத்துக்கொள் !
குவலைக்குல் சுவாசம் இல்லாமல் இருப்பது செடிகள் மட்டும் அல்ல ,
உன் நினைவுகளை சுமந்துக் கொண்டிருக்கும் நானும் தான் !!!…

Thursday, 29 March 2018

குறையில்லை அன்பே !!!

உன் மீது குறைக்கூறும் நோக்கமில்லை 
அன்பே !
உன் அன்பேனும் பெயர் கொண்ட ஆயுதம் 
என்னை துடித்துடிக்க வைத்து கொள்ளுமானால் ,
உன் மீது குறைக்கூறும் நோக்கமில்லை
அன்பே !
என்னை கொள்ளும் முன் என் கண்கள் இரண்டயும் ,சிதைத்து விடு
உன் நினைவுகளின் பதிவுகளுக்கு முக்கிய காரணம் அது ,
உன் செவிகளை, செவுடாக்கிய பின்
என்னை ஊமையாக்கி விடு , ஏன்னென்றால் என் குறல் கேட்ட பின்
உன்னால் என் மரணமுயற்சிக்கு தடை வந்தாலும் வரலாம் .
என் சுவாசத்தை நிறுத்த செய் , சத்தமில்லாமல் துடிக்கும் இதயம்
என் காதலை உன்னிடத்தில் சொன்னாலும் சொல்லிவிடலாம் .
உன் கண்ணை குறுடாக்கி கொள் அன்பே ,
என் பிணத்தை பார்க்கும் தைரியம் நிச்சயமாக உனக்கில்லை .
உன் திருமணத்தில் அனிந்த சிகப்பு புடவை அனிந்து கொள் அன்பே ,
அதில் தான் என் இரத்த கரை மறைந்துக்கொள்ளும் .
இவை அனைத்தும் உன் கையால் நடக்குமானால்
இறந்த பின்பும்
உன் மீது குறைக்கூறும் நோக்கமில்லை
என் அன்பே !

Tuesday, 27 March 2018

ஹைக்கூ !!!

முழு இருட்டில் உடல் தூங்க ,
கண்கள் மட்டும் மூடிய இமைகளோடு
உன்னை தேடி கொண்டிருக்க , 
துளைந்த என்னவளோ !
சில நிமிடம் தோன்றி ,
முதலில் வெளிச்சத்தில் தொலைந்த உன்னை தேடிக் கண்டுபிடி
பிறகு என்னை தேடுவாய் என
சொல்லிக் கொண்டே மறைந்தாள்
தன் அலங்காரத்தை சரி செய்தபடியே ???

Monday, 26 March 2018

வெற்றுக் காகிதம் !!!

உன் அனுமதியில்லாமல் 
நம் நினைவுகளை காகிதத்தில் வார்த்தைகளாக வடிவம்
கொடுத்துக் கொண்டிருக்க ,
திடிர் காற்றின் உருவாய் நீ வந்த போது ,
என்னையும் மறந்து உன்னை ரசித்தபடி இருந்தேன்.
காற்றாய் நீ மறைந்த பின், வடிவம் கொடுத்திருந்த ,காகிதம்
உன் பின்னே பறந்து செல்ல,
காகிதங்களை சேகரித்து பார்த்து வியந்தேன்.
எழுதிய வார்த்தைகள் மட்டும் காணாமல் போக ,
நான் மட்டும் நம் நினைவுள்ள எழுத்துக்களை தேடியபடி,
வெற்று காகிதமாய் நிற்கிறேன் .
காகிதத்தை கடிதமாக்குவதும் ,
காவியமாக்குவதும் , கண்ணீர் அஞ்சலி சுவரோட்டியாக்குவதும் காற்றாய் காணாமல் சென்ற என் சுவாசத்திடம்
மட்டுமே உள்ளது …

Saturday, 24 March 2018

எச்சில்!!!

பல முறை நீ செல்லும் பாதையில் ,
உனக்கு தெரியாமல்
உன்னை பின் தொடர்ந்தேன் ,
நீ சிந்தும் உமிழ் நீரிடம் கேட்க?
என்னவளின் இதயத்தில் எனக்கான இடம் உள்ளதா என
தெரிந்துக்கொள்ள !!!!!!

Friday, 23 March 2018

கத்தியின் காதல் !!!


துண்டு துண்டாக உன்னை அறுக்க எடுத்தக்கத்தி
உன்னை வர்ணித்து அழகாய் எழுத துடிக்குறதே !
என்னை பார்த்து தேர்வு செய்த உன் கண்களை 
நோண்டி பிடிங்கி எடுக்க சென்ற என் கத்தி
உன் புருவ முடிகளை அழுகு செய்ததே !
என் வாசனையை கண்டுபிடித்த
உன் மூக்கை வெட்டியேரிய சென்ற என் கத்தி
உனக்கு வலியில்லாமல் துலையிட்டு மூக்குத்திய மாறியதே !
என்னிடம் பேச துடுக்கும் உன் நாவினை துண்டு துண்டாக்க
சென்ற என் கத்தி
உன் உதடுகளின் மேலுள்ள சாயத்தை சரி செய்துவிட்டு வந்ததே !
உன் சுவாச குழாயில் கோடு போட சென்ற என் கத்தி ,
உன் கழுத்தின் ஆபரணமாய் மாரியதே !
கடைசி முயர்சியாய் உன் இதயத்தை துளையிட்ட என் கத்தி
தானாய் தற்கொலை செய்ததே !!!

Wednesday, 21 March 2018

காத்திருப்பேன் !!!


நீண்ட தூரம் நம் நான்கு கால்களும் பயனித்தது இல்லை ,
நீண்ட நேரம் உன் கை என் கையில் அடங்கியது இல்லை ,
நீண்ட தூரம் உன் மடியில் நான் உரங்கவில்லை,
நீண்ட நேரம் நம் இரு கண்களும் சந்தித்து இல்லை,
இனி !
நீண்ட தூரம் நம் வாழ்க்கை பயனிக்க !
நீண்ட நேரம் என் பளுவை நீ சுமக்க !
நீண்ட தூரம் என் மடியில் நீ உரங்க !
நீண்ட நேரம் உன் மூச்சி கற்றில் நான் கலக்க !
காலமுழுவதும் நம் அடையாளம் நம் பெயர் சொல்ல
என் நிலவே
காத்திருப்பேன் காலங்களுடன் உனக்காக !!


Monday, 19 March 2018

சிறப்பு தரிசனம் !!!


வேண்டுதல் நிறைவேறுவதற்காக பல முறை கோவில் சென்றேன்
பல மணி நேரம் காத்திருந்து பூஜித்தேன்,
இறைவனிடமிருந்து பதில்வரவில்லை,
வேண்டுதல் காத்திருக்க மெளனம் மட்டுமே பதிலாய் அமைந்தது .
வேண்டுதல் இறந்து போக , கோபப்பட்டேன் இறைவனிடம்.
அப்போதும் அமைதியே பதிலாய் இருந்தது.
அவளும் பூஜித்தால் , அவள் உறவும் பூஜித்தது,
வேண்டுதல் உடனே நிறைவேறியது .
காரணம் கேட்டேன் இறைவனிடம் ?
சிறப்பு தரிசனத்தில் வந்த அவர்களின் பூஜையை ஏற்ற இறைவன்
வரிசையில் ,காத்திருந்து பூஜித்த இந்த ஏழைக்கு
காரணம் கூட சொல்லாமல்
கல்லாகவே காட்சியளித்தார் ...

Sunday, 18 March 2018

வெட்டியான் அறிவுறை !!!

 வெட்டியான் அறிவுறை !!!
இறக்க போவதை உணர்ந்த அனாதை , தாம் இறக்கப்போவது தெரிந்து நடைபிணமாக இடுகாடு நோக்கி பயணித்தான் வழியில் வந்த வெட்டியான், அனாதையின் நிலை கண்டு , இங்கு வரக்கூடாது என எச்சரிக்க, சில வினாடிகளில் நான் இங்கு தான் வர வேண்டும் . இறந்த பின் ,என்னை கொண்டு வர உற்றார் , உறவினர் இல்லை, என்னுடன் தற்போது இருப்பது இறந்து போகாமல் , தினமும் என்னை அணு அணுவாக கொலை செய்து கொண்டிருக்கும் என் இறந்த கால அவளின் நினைவுகள் மட்டுமே என்றான் . உரக்க சிரித்தான் வெட்டியான் சிரிப்பை கண்டு புலம்பியபடி அழத்தொடங்கினான் அனாதை , நான் சாபம் பெற்றவன், முன் ஜென்மத்தில் நான் செய்த தவறே ,தற்போது என் சவக்குழியை நானே தோண்டும் நிலைக்கு ஆளானேன் என்றான் அனாதை
தவறு சூழ்நிலையை பொறுத்து அமைவது அல்ல, சூழ்நிலை அமைய நாம் காரணம் ஆகும் போதும் , அந்த சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவை பொருத்து அமைவது
“தவறுக்கு பின் கிடைக்கும் மன்னிப்பும்
இறந்த பின் வரும் கண்ணீரும் ஒரு போதும் பயன் தராது”
இவைகள் அனுதாபங்களை பிரதிபலிக்குமே தவிர ,என்றுமே அன்பை நினைவுப்படுத்தாது என்று சொல்லி அருகில் தொண்டியிருந்த குழியில் படுத்தான் வெட்டியான்...

Thursday, 15 March 2018

நரபலி !!!



திருமணம் எனும் புதையல் கிடைக்க
காதல் எனும் நரபலிக் கொடுத்தவளே !
நரபலிக்கு தகுதியுடையவனாக என்னை தேர்ந்தெடுத்ததன்
காரணம் ஏனோ பெண்ணே ?
கத்தியால் அறுபட்டால் காதலன் தாங்கமாட்டான்
என உன் உண்மை காதலை வெளிப்படுத்தி,
உன் வார்த்தையால் என் கழுத்தை அறுத்தக்
காரணம் ஏனோ பெண்ணே ?
சிந்தும் இரத்தத்தில் உன் முகம் தெரிய ,
ஆம்,
இவன் காதல் உண்மை தான் என ஊர் முழுக்க தண்டோரா
போட்டுவிட்டு
என் இதய துடிப்பை மட்டும் காப்பாத்துவதற்கு
ஓடோடி வந்த காரணம் ஏனோ பெண்ணே ?
சிதறிய இரத்தத்தை உன் திருமண மண்டபத்தில்
தீட்டு கழிய தெளித்துவிட்டு,
இறந்த என் நினைவாக வரும் உன் கண்ணீரில்
உன் பெற்றோரின் கால் கழுவ
காரணம் ஏனோ பெண்ணே ?
என் ஆன்மா உன் அறையினுள் நுழையாமல் இருக்க
மந்திர சொற்கள் பயன்படுத்திவிட்டு ,
என் ஈமை சடங்கு துணியை உன் போர்வையாக்கி
அதில் உறங்குவதை பாதுகாப்பாய் நினைப்பதற்கு
காரணம் ஏனோ பெண்ணே ?
காலை சூரியன் விழிக்கும் முன் நீ எழுந்து
மூன்று வேளை , முனூற்றிஅறுபத்தைந்து நாட்கள் விரதமிருந்து
என்னை சொர்க்கம் அனுப்ப பூஜிப்பதன்
காரணம் ஏனோ பெண்ணே ?
கடைசி வரிகளில் சொர்க்கம் போக நீ பூஜிப்பது தெரிந்திருந்தால் , மூன்றாவது வரியில் நானே அறுபட்டு இறந்திருப்பேன்
என் நி(ம்)மதியே !



Wednesday, 14 March 2018

தூக்கு கயிறு !!!


என்னுள் பாதி நீ என்பது உண்மை தான்.
நேற்றைய நினைவுகளை என்னிடம் விட்டு சென்று ,
நாளைய நிஜங்களை திருடி சென்றாய் .
நாளைய நிஜங்களில் நான் மட்டும் பொய்யாய் போனது
யார் கொடுத்த சாபம் .
சாபமோ , கோபமோ,
இறந்த எனக்கு மறுபடி ஏன் மரண தண்டனை தீர்ப்பு .
தீர்ப்புக்கு நீ செவி சாய்த்து , எனக்கு எதிராய் உன் வாக்குமூலம்,
இறுதி கட்ட விசாரணையில் தெரிய வந்தது,
தூக்குக்கயிறை பரிசளித்தது நீ என்று !
முழு மனத்துடன் தலை கொடுத்தேன்....
என் கடைசி ஆசையை கேட்க கூட நாதி இல்லாமல் நான் ???

தபால் பெட்டி!!!


எழுத்துக்கள் இல்லா கடிதங்களை திருட்டு தனமாக படிக்க நினைக்கும் தபால் பெட்டி !
வார்த்தைகளின் பொருள் புரியாமல் புலம்பிக் கொண்டிருக்கும் தபால் பெட்டி!
மாற்றான் கை சேர்ந்து விடுமோ என அச்சத்தில் கடிதங்களை மறைத்து வைத்திருக்கும் தபால் பெட்டி !
கையில்லா ஊனம் வரைந்த அவள் உருவத்தை பதிவிரக்கம் செய்ய துடிக்கும் தபால் பெட்டி !
அவள் அழகை ஏதோடும் ஒப்பிடாமல் அர்த்தமில்லா வார்த்தையினுள்
ஒலித்து வைத்திருக்கும் தபால் பெட்டி !
எழுதியவன் குறுடன் என தெரிந்து ,
அவன் கிறுக்கிய எழுத்துகளை பாதுகாத்து
உருவமில்லா குறுடனின் விலாசமில்லா காதல் கடிதங்களை பத்திரப்படுத்தி
பெயரில்லா ஊரில் , விலாசமில்லா கடிதங்களை எழுதியபடி , இன்றும் இதயமெனும் வாசலை திறந்தக்கொண்டே,
கடிதங்களின் முகவரி எழுத அவள் வருவாள் என குறுடனுடன் சேர்ந்து காத்திருக்கும் தபால் பெட்டி !!!!!

Monday, 12 March 2018

வலிக்கு மொழியில்லை !!!


வலியை வெளிப்படுத்த ஆதி மனிதர்களிடம் மொழிகளை பயில சென்றேன்
குரு தட்சனையாக கடைசி சொட்டு இரத்தம் கேட்க ,
என்னவள் ,எடுத்து சென்றுவிட்டாள் காதல் பரிசாக என்றேன்
இயற்கையிடம் சிபாரிசு செய்தார்கள் என்னை ,
மொழி இல்லாத இயற்கையோ , காதல் தோல்வியால் விரக்த்திக்குள்ளாகி மழையாகவும் , வெப்பமாகவும் ,காற்றாகவும் ,
அதன் வலியையும் ,வேதனைகளையும் ,
வெளிப்படுத்திக் கொண்டுருக்க,
உருவம் இல்லாத எனக்கு ஏது மொழி என விசும்ப தொடங்கியது.
வழி இல்லா பாதையில் ,கால்கள் துணை இல்லாமல் நடந்து சென்ற என் சிந்தனையை நிறுத்திய வழி போக்கன்
வலிக்கு மொழிகள் இல்லை ஆனால் மருந்துள்ளது ,
என்று !
அம்மருந்தோ உன் வலியையும் , உன்னவளயும் மறக்க அல்ல , அழகாக்க என சொல்லி கையில் கனிந்த இலைகளை உள்ளடக்கிய புல்லாங்குழலை தீயிட்டு மீட்ட (இசைக்க) சொன்னார் சிவன் பெயர் கொண்ட அந்த வழி போக்கன் .
மீட்டிய பிறகு தான் தெரிந்தது என்னுளிருந்து உன் நினைவுகளை மீட்க புகை செய்த போராட்டங்களும் , உன்னை அழகாக வர்ணிக்க செய்த முயற்சிகளும்
ஆம் வலிக்கு மொழியில்லை !!!!

Friday, 9 March 2018

சொல்லாமல் சொல்லி போனாய் !!!

சொல்லாமல் சொல்லி போனாய்
உன் உறவுகள் உனக்கு கை கொடுக்காது என
சொல்லாமல் சொல்லி போனாய்
நீ வசதி படைத்தவன் இல்லை என
சொல்லாமல் சொல்லி போனாய்
உன்னுடன் இறுதி வரை சிரமம் என
சொல்லாமல் சொல்லி போனாய்
உன் தகுதிக்கு மீறிய ஆசை என
சொல்லாமல் சொல்லி போனாய்
என் உறவுகளுக்காக நான் தலை குனிந்தேன் என
சொல்லாமல் சொல்லி போனாய்
என்னை விட , வேறு பெண் உனக்கு இல்லை என
சொல்லாமல் சொல்லி போனாய்
நீ என் வாழ்க்கைக்கான பாதை தான்,
நீயே வாழ்க்கை இல்லை என !!!

Wednesday, 7 March 2018

கைப்பேசி !!!

கைப்பேசி !!!

உன் குரல் கேட்காத என் கைப்பேசிக் கூட,
என் மீது கோபப்பட்டு என்னை விட்டு பிரிய காரணம் யாரோ ?
கோபப்பட்ட கைப்பேசியின் கடவு சொல்லாக பயன்படுத்தப்பட்ட
உன் பெயர் களவு போக காரணம் யாரோ ?
களவாடிய பின் பதிவு செய்யப்பட்ட உன் பெயர் கொண்ட எண்கள் தற்கொலை செய்துக்கொள்ள காரணம் யாரோ ?
தற்கொலை செய்தி அறிந்த உன் பதிவுகள் , விலாசம் தவறி வந்ததாக பொய் சொல்ல காரணம் யாரோ ?
பதிவுகள் தவறா என உன் புகைப்படத்துடன் காரணம் கேட்டபோது காணாமல் போகவில்லை, கடந்து போக முயல்கிறேன் , என குறும்செய்து அனுப்பிய உன் கைப்பேசிக்காக ,
என் அனுமதியின்றி உன் குரல் கேட்க சத்தமில்லாமல் காத்திருக்கும் என் கைப்பேசி !!!!

Tuesday, 6 March 2018

சமிங்ஞை ஓலி !!!

நம் இரு கண்களும் ஒரு ஓளியை பார்த்த போது !
உன் நா உதவியுடன் என் வார்த்தைகள் பயணித்த போது !
உன் மூச்சிக்காற்றை இடைவெளி இல்லாமல் நான் சுவாசித்த போது !
நம் இரு கைகளும் பத்து விரல்களாக பின்னிய போது !
உன் பாதத்தில் என் கால்கள் வரைந்த போது !
உன் கைகள் என் முடியை கோதிய போது !
உன் விரல் நகத்தாலான தழும்புகள் என் உடலில் அடையாளமாகும் போது !
உன் மெளன மொழியால் நீ இசைத்த போது !
இவை அனைத்தும் ஒரு நாள் நடக்கும் பொழுது !
நம்மை ஏமாற்றிய உறவுகள் , ஒரு நாள் ஏமாறும் பொழுது !
நம் இருவரின் நடுவே இருக்கும் உரையாடல் உறவுகளுக்கு தெரியாது ?
நாம் யாரும் அறியா சமிங்ஞை ஓலியால் இன்னும் பேசிக் கொண்டிருப்பது !!!

Monday, 5 March 2018

மனநோயளி !!!

சிந்தனை தெளிவாக உள்ள
ஒருவன்
மனநோயளியாக ஒரு போதும் நடிப்பதில்லை !
அப்படி, நடிப்பதால் அவன் மனநோயளியாகவும் ஆவதில்லை .
ஆனால் !
அன்பு, நம்பிக்கை இழந்த ,
ஒருவன்
சிந்தனை தெளிவாக உள்ளவனாக நடிப்பது தான்,
உன்மையான மன நோய் !!!!
ஆம்
நான் மனநோயாளி தான்
எழுதியவன் ?

Sunday, 4 March 2018

கடல் கரை !!!

கரையில் திணறிய என்னை , கடலுக்குள் கூட்டி சென்று
புது உலகை காண்பித்து ,,
உன் இதயத்தில் இடம் கொடுத்து,,
உன் அன்பில் நீந்த கற்றுக்கொடுத்து,,
நான் மூச்சு தினறிய போது எனக்கு சுவாசம் கொடுத்து,,
அலைகள் சீறும் போது உன் கரம் கொடுத்து,,
என் தூக்கம் கலையா , உன் தூக்கம் கலைத்து
உன் மடிக்கொடுத்து,,
என் பசி மறக்க உன் வேர்வையை பாலாக்கி,,
உன் உமிழ்நீரை தேனாக்கீ , அந்த நீலாவை காட்டி எனை பருக செய்து,,
நாம் இருவரும் கரை சேர போகிறோம் என நான் நினைத்து,,
உன் மடியில் உரங்க ...
நீ மட்டும் கரை சேர்ந்தது நீயாமா ?
நீ போனது கூட தெரியாமல் உன் மடியில் உறங்கிக் கொண்டே இருந்தேன்
கடல் வற்றியது கூட தெரியாமல் !!!!!!!

Friday, 2 March 2018

ஹைக்கூ !!!

உன் மனதில் என்னை சிறையிட்டு சாவியை ஏனடி துலைத்தாய்...!!
சிறை முழுவதும் உன்னை மட்டுமே நினைவுப்படுத்த...
என்னை நிரந்திரமாக நான் மறக்க 
உன் கழுத்து சங்கலி மட்டும் என்னிடம் நினைவுட்டிக் கொண்டே உள்ளது...
தொலைந்தது சாவி இல்லை நீயே என்று ?

என்னுள் நான் ?

விஷ பாட்டில் ?

மன விரக்தியில் தற்கொலை செய்ய முடிவு செய்த அனாதை, தான் சேமித்த பணத்தில் விஷம் வாங்கிக்கொண்டு வழக்கமாக உறங்கும் குப்பைமேட்டின் அருகிலுள்ள ஆலமரத்தை நோக்கி நடந்தான்...
தற்கொலைக்கு முன்பு அவனுக்கான கிழிந்த பாயில் தன் ஞாபகங்களை நினைவு படுத்தியபடி அமர்ந்திருந்தான். அவன் இருக்கும் இடத்தில் உருண்டு ஓடி வந்த இரண்டு ஆப்பிள் பழங்களை கையில் எடுத்தவாறு, பழங்கள் வந்த திசையை நோக்கி பார்த்தான், எதிரே நடந்த விபத்தில் பெண் ஒருத்தி நினைவில்லாமல் விழுந்திருந்தாள், தான் தற்கொலை செய்ய போவதையும் மறந்து விஷ பாட்டிலை பத்திரப்படித்தியபடி அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றான்.
மயக்கத்தில் இருந்த பெண், அனாதை கையில் வைத்திருந்த விஷ பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டு, அவசர சிகிச்சை பிரிவின் உள் சென்றாள்...!!!
விஷ பாட்டிலை தேடி கையில் எடுத்த படி, அந்த பெண்ணின் நிலை கண்ட பின், இறந்து விடலாம் என வெளியில் அமர்ந்திருந்தான்.
மருத்துவர் வெளியே வந்த போது, பாவம்! அந்த பெண் பிறவி பார்வை இழந்தவள், அவள் உடல் நலத்துடன் இருக்கிறாள் என சொல்லி நகர்ந்தார். சற்று புத்திசாலியாக யோசித்த அவன் மண் தின்னும் உடல் தானே கண்ணை இவளுக்கு கொடுத்துவிடாலம் என மருத்துவரிடம் சொல்லி சிகிச்சைக்கு தயாரானான். சிகிச்சை வெற்றிகரமா நடந்து கண் வந்த பெண் தன் உறவுகளை தேடி ஓட ! பார்வை இழந்த அனாதை மீண்டும் விஷ பாட்டிலைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் எப்படி இறப்பது என தெரியாமல்...

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....