Monday, 23 April 2018

அனாதையின் ஜாதகம் !!!


நடு ஜாமம்…
கும் இருட்டில் அருகில் படுத்திருந்த அவளின் இரு கன்னங்கள் மட்டும்
ஜொலித்திக்கொண்டிருந்தது., தூங்கும் அவளை எழுப்ப மனமில்லை , அவள் குண்டு கன்னத்தில் கை வைத்துக்கொண்டே கட்டி தழுவி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அனாதைக்கு திடீர் அதிர்ச்சியாய், சர சரவென சாரல் அடித்தவுடன் சட்டேன எழுந்தான் தூக்க கலக்கத்தில் . அவன் தூங்கியிருந்த ஆலமரத்து அடி வேர் அருகே சாரல் படா இடமாய் பார்த்து அமர்ந்து கொண்டே அரைதூக்கத்தில் தன் தினசரி காதல் கனவை மறுபடி தொடங்கினான் .
விடிந்தவுடன் தினசரி வேலையாய் , திருமணமான தன் காதலியின் வீட்டை பார்த்து பின்பு , முதல் வேலையாய் தனக்கென பிறந்தஅடையாளம் ஒன்றை உருவாக்க கேலண்டரைப் பார்த்து 12 இராசியில் எது அன்று வெற்றி என்று உள்ளதோ , அந்த இராசியை குறித்துக் கொண்டு, தோரயமாக ஒரு வயதை நிர்ணயத்து விட்டு, ஜோதிடரை பார்க்க புறப்பட்டான் அனாதை. தான் இருக்கும் இடம் அருகில் பெயர் போன ஜோதிடர் யார் என ? விசாரித்து அவர் வீட்டை சென்றடைந்தான். கதவை திறந்து 2 அடி எடுத்து வைக்கும்போதே காலில் இருந்த செருப்பின் விதி முடிய , தவ்வி தவ்வி நடந்து செருப்பை வெளியே கழட்டிவிட்டு , ஐயா’’ என்று கூப்பிட , அனைத்தயும் உள்ளே இருந்து பார்த்துக்கொண்டு இருந்த ஜோதிடர் ‘’ உள்ளே வாங்க என்றார்’’ பெரிய வீடு , ஜோதிடம் பார்ப்பதற்கென, பிரத்தியேக அறை ஒன்றை கட்டி வைத்திருந்தார் ஜோதிடர் .. உள்ளே பெயர் தெரியாத பல சாமி படங்கள் , பழங்கால ஓலை சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பெரிய குத்து விளக்கு எரிந்துகொண்டிருக்க, அனாதையின் பார்வை பட்டதும் அணைந்தது அபசகுனமாகப்பட்டது ஜோதிடருக்கு.. மனதளவில் அனாதையை கணித்தப்படி உட்கார சொன்னார் . சொல்லுப்பா என்ன விஷயம் என கேட்டப்படி வெத்திலை சீவலை மடித்து அசை போட துவங்கினார் . ”ஐயா ‘’ என்ற மரியாதையோடு பேச்சை ஆரம்பித்த அனாதை ”எனக்கு 27 வயதாகிறது , பல பெண்ணைகளை காதலிச்சேன் . அவங்கக்கிட்ட என் காதலை சொல்ல பயந்து தயங்கி இருந்தேன். நான் காதலிப்பதை தெரியாமலே அவங்க எல்லாம் மறஞ்சி போய்ட்டாங்க . பல வருடம் கழிச்சு ஒருத்தி என்னை காதலிச்சா, எங்க காதல் அவள் வீட்டிற்கு தெரியவர, நான் அனாதைன்னு தெரிந்த அவள் வீட்டார் மறுத்துட்டாங்க , காதலியோ பொற்றோர் பேச்சைக் கேட்டபடியே பணக்கார பையனை கல்யாணம் செஞ்சிக்கிட்டு போய்டாங்கய்யா.
கல்யாணத்துக்கூட என்னை கூப்பிடல,அனாதையான எனக்கு மிகுந்த மனஉளைச்சல், ஆறுதலுக்கு கூட ஆளில்லாமல் தனியே இருக்கிறேன் ஐயா”, என்று தேம்பி, தேம்பி அழுதான். ஜோதிடர் அவன் கண்களை துடைக்கச் சொன்னார்.துடைத்தவன் தேம்பலை நிறுத்தியவன், எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை இருந்தாலும் என் எதிர்காலம் எப்படி இருக்கும் தயவு செய்து உண்மையை சொல்லுங்க என்றான். பாவம் பா நீ ! என்று சொல்லியபடி வெத்திலையை துப்பிவிட்டு - பிறந்த தேதி, இராசி சொல்லுப்பா என்றார் . சேகரித்த அனைத்து விவரத்தையும் கொடுத்தான் அனாதை . ஜோதிடர் கட்டம் போட்டு , ஓலைசுவடிகளை அலசி , பெரும் மூச்சு விட்டு மூணு முக்கிய குறிப்புகளை சொன்னார்.
குறிப்பு -1 - உனக்கு 100 ஆயுசுப்பா ...
குறிப்பு -2 - உன்ன கலயாணம் பன்ன போற பொண்ணு கொடுத்துவைச்சவ, நீங்க ரெண்டு பேரும் சேந்திங்கனா வெற்றியின் உச்சத்திற்கு போவிங்க …
குறிப்பு -3 - உனக்கு கிடைக்கும் பொண்ணும், அவளின் குடும்பமும் முன் ஜென்மத்தில் புண்ணியம் பண்ணிருக்கனும் .
என்று ஜோதிடர் சொல்லிக்கொண்டிருக்க, அல்ப திருப்தி அடைந்த அனாதை கனவுலகில் மிதக்க , போய்ட்டு வரேன் பா ! என குயில் குரலில் சொல்லியபடி பறந்த ஜோதிடரின் மகளை பார்த்தான் அனாதை ..
நல்ல ஜாதகம் தானே ஐயா உங்க மகளை எனக்கு திருமணம் செய்துகொடிங்களேன் என அனாதைக் கேட்க ?
ஜோதிடர் ????????????????????

No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....