வாழ்க்கையில் உறவுகளை பிரிந்த வலிகள் என்றும் வந்ததே இல்லை.
வலி தரும் அளவிற்கு எந்த உறவும் உடன் பயணித்ததில்லை.
உறவுகளின் அருமையும் தெரியவில்லை . தெரிந்தும் வளரவில்லை .
வளர்ந்தும் தெரியவில்லை .
பெயர் மறந்து உருவம் மறந்து ஆங்காங்கே ,
சிதறி இருக்கும் சொந்தங்கள் என்றோ ஒரு நாள் கூடும் பொழுது
அடையாளம் தெரியாமல் காட்டும் போலி பாசங்கள் என்றும்
ஆழ்ந்த அன்பை தந்ததில்லை...
நடப்பதிற்கு பாதை இல்லாதது போல் நடக்கும் மனிதர்களுக்கு மத்தியில்
நம்முடன் யாரும் வரவில்லையே என்ற ஏக்கம் என்னை தொடர்ந்தவாறே வருகிறது .
ஆனால் உறவுகளின் அன்பு மட்டும் தொடரவேயில்லை.
நீண்ட நேரம் ,நீண்ட காலம் ,என் தனிமைக்கு எதிராய் ,
எனக்கு துணையாய் பயணித்த உறவு எனக்கு பாடமாய் மாறும் என்பதை
நான் அறியவில்லை ..
பகல் பொழுதில் உடன் இருப்பவர்கள் , இரவில் பிரிந்துவிடுவதும் ,
இரவில் உடன் இருக்கமாட்டார்களா என மனம் ஆசைப்படும் உறவு
உதாசினப்படுத்துவதும் , மன அமைதிக்கு எதிரான போராட்டங்கள் அது.
தனிமையை நான் வெறுத்தவன் என தெரிந்தும் ,
தனிமை என்னுடன் பயணிக்க துடிக்கிறது .
துணைக்கு கண்ணீரை அழைத்தால் கண்ணீரும் வரவில்லை
நான் காதலில் தோற்றவனாய் , என் காதல் தோற்று ,
தனிமையின் காதல் என்னுடன் வென்று விடுமோ என்ற பயம் தெடர்கிறது தினமும்,
அச்சமயம் கண்ணீர் மட்டும் தான் துணையாய் வருகிறது .
விதி என வாழ்வதா , விதியை வெல்லும் மதி எங்கே என தேடுவதா ?
விதி இல்லா வாழ்க்கையும் ,மதி இல்லா வாழ்க்கையும் இறந்த உடல் போல் தான்
எவ்வளவு நெருங்கிய உறவென்றாலும்
சில மணித்துளிகளே உடன் இருக்கும் என்பது அனுபவ உண்மையே !
வாழ்க்கையை இயற்கையுடன் ஒப்பிட்டு இரசித்து வாழ ஆசைப்பட்டவனுக்கு ,
இயற்கையாய் அமைவது தான் வாழ்க்கை என புரிய வைத்த ,
புரியா உறவுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் ..
No comments:
Post a Comment