உன்னை பார்க்க அனுமதித்த நீ உன் புகைப்படத்தைப் பார்க்க ஒரு நொடி கூட அனுமதிக்கவில்லை !
காரணம் உன் உடல் பருமனா ?
இல்லை புகைப்படத்தில் அருகில் இருக்கும் உன் கணவனா?
காரணம் மட்டும் தெரியவில்லை ?
இறுதி வரை காரணம் சொல்லாமல் சென்றாய் ?
அரை இறுதியில் காரணம் தெரியவில்லை என்றாய் ?
இறுதியில் காரணமே இல்லை என்றாய் !
உன் வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் ,
உன் வாழ்க்கை புரிகிறது !
உன் கனவனுடன் நீ எடுத்த அந்த புகைப்படத்தில் !!!
No comments:
Post a Comment