உன்னை வர்ணிக்க வார்த்தைகள் தேடுகிறேனடி பெண்ணே !
வார்த்தைகள் எங்கும் கிடைக்கவில்லை பெண்ணே !
வார்த்தைகள் எங்கும் கிடைக்கவில்லை பெண்ணே !
கிடைத்த வார்த்தைகள் பயன்படவுமில்லையடி பெண்ணே !
பயன்படுத்தவும் எனக்கு தெரியவில்லை பெண்ணே!
என் கவிதை குருவிடம் கேட்டு வந்தேனடி பென்ணே
சந்தேகமும் தீரவில்லையடி பெண்ணே .
நீ வகுடெடுத்து சீவும் தலை நடுவே உள்ள குங்குமமும் !
உன் கால் விரலை இறுக்கமாய் பிடித்திருக்கும் வளையமும் !
கழுத்து பகுதியை ஆக்கிரமித்திருக்கும் மஞ்சள் கயிறும் !
ஏனோ என் எழுத்துக்களை தடுத்துக்கொண்டே உள்ளதடி பெண்ணே !!!
No comments:
Post a Comment