ஏன் சென்றாள் ?
எதற்காக சென்றாள் ?
என்னை விட்டு பிரியும் கட்டாயம் ஏனோ ?
யார் கைபிடித்து நான் நடப்பேன் ?
இனி யார் மடியில் என் உறக்கம் ?
இவை எதற்கும் பதில் தெரியாமல் அழுதுக்கொண்டிருக்கும்
அனாதை ஆசிரமக் குழந்தை !!
ஏன் சென்றாள் ?
எதற்காக சென்றாள் ?
என்னை விட்டு பிரியும் கட்டாயம் ஏனோ ?
யார் கைபிடித்து நான் நடப்பேன் ?
இனி யார் மடியில் என் உறக்கம் ?
இவை எதற்கும் காரணம் தெரியாமல் மன நோய் காப்பகத்தில்
யோசித்துக்கொண்டே மரணமடைந்த மனதுடன்
வாழ்ந்துக்கொண்டிருக்கும் அக்குழந்தையின் தந்தை !!!!!!
வாழ்ந்துக்கொண்டிருக்கும் அக்குழந்தையின் தந்தை !!!!!!
No comments:
Post a Comment