Friday, 3 August 2018

அவள் விருப்பம் !

அவள் விரும்புவதை விருப்பம் போல்
கொடுக்க தெரியாது நின்ற
எனக்கு !


நான் விரும்பி விருப்பம் போல்
கொடுக்கும் நேரத்தில் ஏற்க முடியா
சூழ்நிலையில் நின்றாள்
அவள் !


அவள் சூழ்நிலை தெரிந்து விலகியே
நின்றேன் !


நான் விலகி சென்றதை புரிந்தக் கொண்ட  
அவள் விருப்பத்தை செம்மையாக
நிறைவேற்றினால் !


இடைவேளியின் எல்லை முடிவில் தெரிய வந்தது
விலகி சென்றது நான் இல்லை ,
அவள் தான் என்று !!!  


விலகி செல்ல நெறுங்கி வந்தவள் ,
விளக்கம் சொல்லாமலே
சென்றாள் .


விலகிய பின் தெரிய வந்தது ,
விளக்கம் சொல்லக் கூட நான்
தகுதி இல்லாதவனாய் என்னை
நினைத்தாள் என்று !


தகுதியில் தரம் பார்த்தவள்
தலையெழுத்தில் பிழையானாள் !


தலையெழுத்து என்றும் தரத்தை தீர்மானித்து அமையாது !!!

இனி வரும் காலங்களில் ‘
வாழ்வியலில் புரிந்துக்கொள்வாள் அவள் தலையெழுத்தை !!!


No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....