Thursday, 30 August 2018

நாடகம் !!!

அரிதாரம் பூசா முகத்தில்
அவனோடு அவள் ரம்பித்த,
காதல் நாடகம் ,
அவளின்  திருமணமேடையில்
முடிவடைந்தது !

அலங்காரம் செய்து ஆரம்பிக்க
தொடங்கினால் அடுத்த நாடகத்தை
அவளின் முதலிரவு அறையில்   !!!



               

Monday, 27 August 2018

அங்கும் அவள் இல்லை !!!

அது ஒரு அழகிய இடம்
குயில் கூவ, மயில் ஆட, மரங்கள் அசைய ,
அந்த காட்டு வழி பாதையில் போய் தேடினேன் ,
அங்கும் அவள் இல்லை !

வித விதமான சத்தத்தில், அசைந்தாடும்
அலைகள் அருகே, என்றாவது ஒரு நாள்
என்னை வந்தடையமாட்டாய, என காத்திருக்கும்
மணல் திட்டின் அருகே சென்று பார்த்தேன்,
அங்கும் அவள் இல்லை !

நிரந்தரமில்லாது ஓடிக்கொண்டே ,
தன் நிரந்தர இடத்தை தேடிக்கொண்டிருக்கும் ,
அந்த நதிகரை அருகே தேடிப் பார்த்தேன் ,
அங்கும் அவள் இல்லை !

வண்ணம் தீட்டிய வானம் ,
தன் வன்ணங்கள் பிரியும் தருவாயில், வரும்
கண்ணீரில் நினைந்த படியே தேடி
சென்றேன், அந்த நிழற்கொடையை நோக்கி
அங்கும் அவள் இல்லை !

வர்ணிக்க முடியா இருட்டு ,
அமைதியான இடம் ,
அனுமதியில்லாது உள் செல்ல முடியாது
அந்த அறைக்கு .
அங்கும் அவள் இல்லை

அங்கும் தேடினேன், இங்கும் தேடினேன் ,
எங்கும் அவள் இல்லை !

ஆனால், நான் தனியே  தேடிய இடத்தில் எல்லாம்
அவள் ஜோடியாய் வந்து சென்ற

கால் தடம் மட்டும் பதிந்திருந்தது  !!!










Tuesday, 21 August 2018

தற்கொலை ?

தற்கொலை என்ற வார்த்தையில் ,
கொலை என்ற பொருள் அடங்கி இருப்பதை தெரிந்த ,
அவள் செய்த காதல் தற்கொலை நாடகத்தில்
நிரந்தரமாக கொலை செய்யப்பட்டவன் நான் …




Sunday, 12 August 2018

விருந்து !!!

அன்றிரவு சுவைத்ததை விட
இன்று சுவையில் சற்று மாற்றம்
உள்ளது

பரிமாறிய உன் விருந்தில்
பிழையா ?
இல்லை,
சுவைத்த என்
நாவில் பிழையா ?

மெளனமான உன் உதட்டில் புரிந்தது,
நீ பரிமாறிய உணவு,
எனக்கானதாய் இல்லை என்று !!!






Thursday, 9 August 2018

அறிமுகம் !

அன்று காதல் என்ற வார்த்தை  
அவளுக்குத்  தேவைப்பட்டது

தகுதி என்ற வார்த்தை தடையாக இருந்தது
நட்பு என்ற பாலம் தடையை மீறியது .

பழகியதிலேயே நான் சிறந்தவன் என்றாள் .
பழக்கத்திலே என்னை உடையவன் என்றாள் .
பழகிய பின் காதலன் என்றாள் .
பழக்கம் முடிந்த பின் உன்னை போல்
நல்லவன் யாரும் இல்லை என்றாள் .

கடைசியாக நேற்று,

இவர் தான் என் கணவர்
என சொல்லி முடித்தால் !!




Monday, 6 August 2018

புகை !!!

உன்னை நினைத்து துடித்த இதயம்
புகையினால் மூடிக் கொண்டிருக்க ,
தொடர்ந்து தேடிக்  கொண்டிருக்கிறேன்
உனக்கான வரிகளை என் கவிதைகளில்

சேர்க்க !!!



Friday, 3 August 2018

அவள் விருப்பம் !

அவள் விரும்புவதை விருப்பம் போல்
கொடுக்க தெரியாது நின்ற
எனக்கு !


நான் விரும்பி விருப்பம் போல்
கொடுக்கும் நேரத்தில் ஏற்க முடியா
சூழ்நிலையில் நின்றாள்
அவள் !


அவள் சூழ்நிலை தெரிந்து விலகியே
நின்றேன் !


நான் விலகி சென்றதை புரிந்தக் கொண்ட  
அவள் விருப்பத்தை செம்மையாக
நிறைவேற்றினால் !


இடைவேளியின் எல்லை முடிவில் தெரிய வந்தது
விலகி சென்றது நான் இல்லை ,
அவள் தான் என்று !!!  


விலகி செல்ல நெறுங்கி வந்தவள் ,
விளக்கம் சொல்லாமலே
சென்றாள் .


விலகிய பின் தெரிய வந்தது ,
விளக்கம் சொல்லக் கூட நான்
தகுதி இல்லாதவனாய் என்னை
நினைத்தாள் என்று !


தகுதியில் தரம் பார்த்தவள்
தலையெழுத்தில் பிழையானாள் !


தலையெழுத்து என்றும் தரத்தை தீர்மானித்து அமையாது !!!

இனி வரும் காலங்களில் ‘
வாழ்வியலில் புரிந்துக்கொள்வாள் அவள் தலையெழுத்தை !!!


ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....