Tuesday, 2 October 2018

மாற்றம் ;-


உன் கால் சலங்கையில் கொஞ்சி விளையாடும் முத்துக்களில் என்னை புதைத்தாய் !

அந்த கால் விரல்களில் இறுக்கமாய் பிடித்திருக்கும் மெட்டியை ஏனடி மறைத்தாய் !

மஞ்சள் நிற தங்க சங்கிலிக்காகவா , என் கருப்பு நிற , கழுத்து மணியை தூக்கி எறிந்தாய் !

 காதலன் பரிசளித்த பருத்தியாடையில் அழகாயில்லை

என்பதற்காகவா, பட்டாடைக்கு ஆசைப்பட்டாய்  !

நம் மூச்சு முட்டிய  தறுவாயில் , தரையில் இருக்கும் எறும்பு உன் உடலை சுவைத்ததற்காகவா , வசதியான பஞ்சி மெத்தைக்கு மாறினாய் !

மாற்றம் தேவை தான் ,
மாற்றம் உண்மை தான் ,

பாவம் எறும்பு மெத்தையில் ஏறி வர வசதி இல்லாமல் தடுமாறி நிற்கிறது .......
என்னைப் போல் !!!!

No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....