Thursday, 11 October 2018

மனக்குரல் !!!

என்னை பார்த்து விலகிய
அவள் துப்பட்டாவை
சரி செய்தப்படியே ,
என் கண்ணை கூர்ந்து கவனித்தாள் ,

என் பார்வையில் ,
அவள் அவளாக இல்லை !
ஆனால் அவளுக்கு அவள் , அவள் தான்

பழகிய நாட்களை
கடந்து சென்றேன்.
தனியே தவித்த நாட்கள்
அதிகமாகிக்கொண்டே போனது !

என் நா , என்னிடம்
பல கேள்விகளை வினாவியது ?
அவளிடம் அதை வினாவ மனம் மறுத்துவிட்டது !

என்னை கடந்து சென்ற அவளிடமிருந்து
மீண்டும் மீண்டும்
என் காதில் கேட்ட அவளின் மனக்குரல் !


உடல் பசிக்கு மொழி முக்கியாமில்லையாம் !

உடல் மொழிக்கு காதல் தடையில்லையாம் !

அவளின் மனக்குரல் !




No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....