Saturday, 28 April 2018

சத்தம் !!!

ஏதோ ஒரு சத்தம் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளது .
அது சத்தமா ,ஓசையா , ஒலியா, இசையா , இரைச்சலா
சரியாக சொல்ல தெரியவில்லை.
பிறப்பிலே செவுடன் நான்
என் காதில், இந்த சத்தம் சாத்தியமா ?
அந்த சத்தத்தை மற்றவரிடம் சொல்லி புரியவைக்க முடியவில்லை.
சொன்னாலும் யாருக்கும் புரியவில்லை.
ஏனென்றால், நான் ஒரு ஊமை.
சைகையில் சொல்லத் துடித்தேன் கையிமில்லை.
சத்தம் மறைய மருந்து தேடினேன் கிடைக்கவில்லை .
அந்த சத்தம் தொடருமானால் நான் இறக்ககூட நேரிடும்.
இறப்பதிற்கு பயமில்லை .
இறந்தும் தொடர்ந்தால் ?

Wednesday, 25 April 2018

காமம் !!!

இருவரின் காமப் பசியால் பிறந்தவன் நீ !
கற்றுக் கொடுக்கப்படாத காமத்தை ,
கற்றுக்கொள்ளும் வயதை அறியாது வளர்ந்தவன் நீ !
காமம் பயில பயிற்சிக்கு பள்ளி தேடியவன்
நீ !
பள்ளியில் கற்று தராத பாடம் ?
பல படங்களை பார்த்து,
பல இடங்களை பார்த்து கற்றாய் நீ !
கற்றுக் கொண்ட பாடத்தின் தேர்வு தேதியை
முடிவு செய்தவன் நீ !
தேர்வின் முடிவாய் ,
இருவரின் காம பசியால் , பிறந்தவன் நீ !!!!!!

Tuesday, 24 April 2018

எங்கே அவள் !!!

 எங்கே அவள் ?
என்னை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல்
விலைக்கு வாங்கிய அவள் !
உரிமைக் கொண்டாடிய அவள் !
உரியவனாக பிரகடனம் செய்த அவள் !
என் அடையாளமான அவள் !
விலைமதிப்பில்லா செல்வத்தால்
விலை போகிவிட்டாள் .
இன்று விலைக்கு நான் வந்துவிட்டேன் !
வாங்க அவள் ?
வாங்கிய அவள் ?

Monday, 23 April 2018

அனாதையின் ஜாதகம் !!!


நடு ஜாமம்…
கும் இருட்டில் அருகில் படுத்திருந்த அவளின் இரு கன்னங்கள் மட்டும்
ஜொலித்திக்கொண்டிருந்தது., தூங்கும் அவளை எழுப்ப மனமில்லை , அவள் குண்டு கன்னத்தில் கை வைத்துக்கொண்டே கட்டி தழுவி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அனாதைக்கு திடீர் அதிர்ச்சியாய், சர சரவென சாரல் அடித்தவுடன் சட்டேன எழுந்தான் தூக்க கலக்கத்தில் . அவன் தூங்கியிருந்த ஆலமரத்து அடி வேர் அருகே சாரல் படா இடமாய் பார்த்து அமர்ந்து கொண்டே அரைதூக்கத்தில் தன் தினசரி காதல் கனவை மறுபடி தொடங்கினான் .
விடிந்தவுடன் தினசரி வேலையாய் , திருமணமான தன் காதலியின் வீட்டை பார்த்து பின்பு , முதல் வேலையாய் தனக்கென பிறந்தஅடையாளம் ஒன்றை உருவாக்க கேலண்டரைப் பார்த்து 12 இராசியில் எது அன்று வெற்றி என்று உள்ளதோ , அந்த இராசியை குறித்துக் கொண்டு, தோரயமாக ஒரு வயதை நிர்ணயத்து விட்டு, ஜோதிடரை பார்க்க புறப்பட்டான் அனாதை. தான் இருக்கும் இடம் அருகில் பெயர் போன ஜோதிடர் யார் என ? விசாரித்து அவர் வீட்டை சென்றடைந்தான். கதவை திறந்து 2 அடி எடுத்து வைக்கும்போதே காலில் இருந்த செருப்பின் விதி முடிய , தவ்வி தவ்வி நடந்து செருப்பை வெளியே கழட்டிவிட்டு , ஐயா’’ என்று கூப்பிட , அனைத்தயும் உள்ளே இருந்து பார்த்துக்கொண்டு இருந்த ஜோதிடர் ‘’ உள்ளே வாங்க என்றார்’’ பெரிய வீடு , ஜோதிடம் பார்ப்பதற்கென, பிரத்தியேக அறை ஒன்றை கட்டி வைத்திருந்தார் ஜோதிடர் .. உள்ளே பெயர் தெரியாத பல சாமி படங்கள் , பழங்கால ஓலை சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பெரிய குத்து விளக்கு எரிந்துகொண்டிருக்க, அனாதையின் பார்வை பட்டதும் அணைந்தது அபசகுனமாகப்பட்டது ஜோதிடருக்கு.. மனதளவில் அனாதையை கணித்தப்படி உட்கார சொன்னார் . சொல்லுப்பா என்ன விஷயம் என கேட்டப்படி வெத்திலை சீவலை மடித்து அசை போட துவங்கினார் . ”ஐயா ‘’ என்ற மரியாதையோடு பேச்சை ஆரம்பித்த அனாதை ”எனக்கு 27 வயதாகிறது , பல பெண்ணைகளை காதலிச்சேன் . அவங்கக்கிட்ட என் காதலை சொல்ல பயந்து தயங்கி இருந்தேன். நான் காதலிப்பதை தெரியாமலே அவங்க எல்லாம் மறஞ்சி போய்ட்டாங்க . பல வருடம் கழிச்சு ஒருத்தி என்னை காதலிச்சா, எங்க காதல் அவள் வீட்டிற்கு தெரியவர, நான் அனாதைன்னு தெரிந்த அவள் வீட்டார் மறுத்துட்டாங்க , காதலியோ பொற்றோர் பேச்சைக் கேட்டபடியே பணக்கார பையனை கல்யாணம் செஞ்சிக்கிட்டு போய்டாங்கய்யா.
கல்யாணத்துக்கூட என்னை கூப்பிடல,அனாதையான எனக்கு மிகுந்த மனஉளைச்சல், ஆறுதலுக்கு கூட ஆளில்லாமல் தனியே இருக்கிறேன் ஐயா”, என்று தேம்பி, தேம்பி அழுதான். ஜோதிடர் அவன் கண்களை துடைக்கச் சொன்னார்.துடைத்தவன் தேம்பலை நிறுத்தியவன், எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை இருந்தாலும் என் எதிர்காலம் எப்படி இருக்கும் தயவு செய்து உண்மையை சொல்லுங்க என்றான். பாவம் பா நீ ! என்று சொல்லியபடி வெத்திலையை துப்பிவிட்டு - பிறந்த தேதி, இராசி சொல்லுப்பா என்றார் . சேகரித்த அனைத்து விவரத்தையும் கொடுத்தான் அனாதை . ஜோதிடர் கட்டம் போட்டு , ஓலைசுவடிகளை அலசி , பெரும் மூச்சு விட்டு மூணு முக்கிய குறிப்புகளை சொன்னார்.
குறிப்பு -1 - உனக்கு 100 ஆயுசுப்பா ...
குறிப்பு -2 - உன்ன கலயாணம் பன்ன போற பொண்ணு கொடுத்துவைச்சவ, நீங்க ரெண்டு பேரும் சேந்திங்கனா வெற்றியின் உச்சத்திற்கு போவிங்க …
குறிப்பு -3 - உனக்கு கிடைக்கும் பொண்ணும், அவளின் குடும்பமும் முன் ஜென்மத்தில் புண்ணியம் பண்ணிருக்கனும் .
என்று ஜோதிடர் சொல்லிக்கொண்டிருக்க, அல்ப திருப்தி அடைந்த அனாதை கனவுலகில் மிதக்க , போய்ட்டு வரேன் பா ! என குயில் குரலில் சொல்லியபடி பறந்த ஜோதிடரின் மகளை பார்த்தான் அனாதை ..
நல்ல ஜாதகம் தானே ஐயா உங்க மகளை எனக்கு திருமணம் செய்துகொடிங்களேன் என அனாதைக் கேட்க ?
ஜோதிடர் ????????????????????

Thursday, 19 April 2018

பெண் - கடவுள் போல !!!

பெண் கடவுள் போன்று 
உருவமாய் இருப்பாள் உணர முடியாது .
வேண்டிய அனைவருக்கும்
அவள் தரிசனம் கிடைப்பதில்லை
அவள் கொடுக்கும் தரிசனத்தை
தடுக்கும் உரிமை யாருக்குமில்லை.
கருவறையில் பூஜை
புனஸ்காரங்களும் நடக்கலாம்
கற்பழிப்புகளும் நடந்திருக்கலாம்.
கல்லாய் இருக்கும் கடவுளை
நம்பாமல் இருப்பவரும் உண்டு
உன்னால் தான் எனக்கு யாவும் நடக்கிறது
என்று நம்பியவரும் உண்டு .
உன் நம்பிக்கையைப் பெறுவதற்காக
விரதம் இருப்பவர்களை,
நீ கண்டுக்கொள்ளாமலும் இருப்பாய் .
உன்னை கண்டுக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு
உன் முழு தரிசனமும் தந்தாலும் தந்திருப்பாய்
வேண்டுதல் நடக்க, மனம் , உடல்
வருத்தி காவு கொடுத்து புஜிப்பார் உண்டு.
பாவை காதலில் …...
இவை பத்தாதென
நீ காவு போகும் நிலையும் உண்டு
அவள் கருவறையில் இருக்கும்
பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை
அப்படி கிடைக்குமாயின் அத்துடன் சொர்க்கம் ஏதுமில்லை
சிற்பங்களில் உள்ள வடிவம் போல்
அவள் மனதும் பல முகங்களில் பல கருத்துக்களை
பிரதிபலிக்கிறதே !
கல்லின் நிர்வாணம் சிற்பியின் கையில்
கடவுளின் நிர்வாணம் பக்தர்களின் பார்வையில்
அவளின் நிர்வாணம் மனதால் , உடலால்
என்றும் கடவுள் தான் ...
கல்லாய் இருக்கும் அவளை , சிற்பமாக மாற்றும் பாக்கியம் சிலரிடம் மட்டுமே கிடைக்கும் …!
பெண் கடவுள் போன்று
உருவமாய் இருப்பாள் உணர முடியாது !!!!!
உணர்ந்தவன் கடவுள் .....

Monday, 16 April 2018

ஊனம் !!!

யார் ஊனம் ?
கண் இருந்தும் பார்வை இல்லாதவன் ஊனம் இல்லை ,
கண்ணீர் வரும் போது துடைக்க கை வாராது தனியே அழுகிறவன் ஊனம்
கால் இல்லாமல் நடக்க முடியாதவன் ஊனம் இல்லை
நடை பழகும் போது தவறி விழும் முன் தாங்கி பிடிக்க கை வாராதவன் தான் ஊனம்
உண்ண கை இல்லாதவன் ஊனம் இல்லை
கை இருந்தும் உன்னிடம் யாசகம் கேட்பவன் ஊனம்
பேச வாய் இல்லாதவன் ஊமை இல்லை
வாய் இருந்தும் பேச வார்த்தைகள் இல்லாதவன் தான் ஊனம்
ஓசையை கேட்க காது இல்லாதவன் ஊனம் இல்லை
கேட்க்கும் காதுக்கு மொழி தெரியாது இருப்பவன் ஊனம் .....
இதயம் இருந்தும் சுவாசம் இல்லாதவன் ஊனம் இல்லை
காற்றாய் நீ வரும் போது உன்னை சுவாசிக்க தெரியாத என்
இதயம் தான் ஊனம்
ஏ ஊனமே ‘
உடலில் எது ஊனமாக ஆனாலும் , என் உயிர் மட்டும் ஊனமாக ஆக்கிவிடதே ,
அவளால் ஏற்பட்ட காயாத்தால் இறந்த என் இதயத்திற்கு என்னால் பதில் கூர இயாலாது,
துணை எழுத்தால்லா
உன் வார்த்தையை போல் தான்
எழுதியவன் வாழ்க்கையும் ஒரு ஊனம் !
எழுதியவன் ????


Thursday, 12 April 2018

பார்த்து ரசித்தது !!!

இரவு 11.45 கடைசி இரயில் ,உச்சகட்ட கூட்ட நெரிசலில் , ஒருவர் கால் மீது ஒருவர் கால் வைத்தப்படி புறப்பட்டது அந்த ரெயில் . வியர்வையில் உடல் முழுவதுமாய் நினைய , துடைக்க எடுக்கும் கைக்குட்டையிலும் வியர்வை நீர் கொட்டியபடி இருந்தது . இவன் முகம் அவன் முகத்தோடு உராய , அவன் மூச்சுக் காற்றை இவன் சுவாசிக்க , அருவெறுப்பை அதிகம் கொண்டது அந்த தினசரி ரெயில் பயணம். திடீரென்று வரும் கைபேசியின் அழைப்பை எடுக்கக்கூட முடியாமல் அலைமோதும் கூட்டம் , யார் அழைக்கிறார்கள் , யார் அழைத்திருப்பார்கள் என மன போராட்டம் ஒரு பக்கம் , நடுவழியில் signal என்ற பெயரில் சில மணித்துளிகள் தாமதம் ஆகவும் வாய்ப்புள்ளது . வீட்டிற்கு என்ன பொருட்கள் வாங்க சொன்னார்கள் என சிந்தித்துக் கொண்டே , ஏதோ நியாபகத்தில் பயணித்தபடி , இந்த சகிப்பையெல்லாம் தாண்டி நாம் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அப்பாடா என்ற பெருமூச்சு விட்டு இறங்கியதும் , அலைமோதும் கூட்டத்தின் நடுவே நமக்கென தனி பாதையை கண்டறிந்து இரயில் நிலையத்தை விட்டு வெளியே நடக்க தொடங்கியதும் ,
நாம் தினசரி பயணிக்கும் தூரத்தை துல்லியமாக மனதில் கணக்கு வைத்துக்கொண்டு, அந்த தெருவிளக்கின் கீழ் , சிகப்பு நிற scooty pep வண்டியில் வெள்ளை நிற நைட்டியில் ரோஜா பூக்கள் தூவி விட்டது, போன்ற வடிவம் கொண்ட ஆடையை அணிந்து , நைட்டிக்கும், மேல் அணியும் துப்பட்டாவிற்கும், சம்பந்தம் இல்லா நிற ஷாலை அணிந்த படி, நடு இருட்டிலும் பளீர் என்ற புண்ணகை முகத்தோடு காத்திருந்தாள் மனைவி. வண்டியை வேகமாக ஓட்டி வந்ததால் கலைந்த முடியை கண்ணாடி பார்த்து சரி செய்தபடி ,அவன் வருகையை எதிர் பார்த்து வண்டிமேல் அமர்ந்திருக்க ?
கூட்டத்திலிருந்து கலைந்து, முதலில் தெரு விளக்கு கம்பத்தை பார்த்த அவன், தன் கண்பார்வையை மெல்ல கீழே இறக்கி அவளின் சிரித்த முகத்தை பார்த்தபடியே சற்று வேகமாக நடக்க தொடங்கினான். நடந்து செல்லும்போதே உதிர்ந்த இலை ஓன்று அவள் தலை மேல் விழ , தன் கணவனை பார்த்த படியே அவள் உதறிவிட , கணவனுக்கோ அந்த 30அடி தூரம், பல மணி நேரம் கடந்து செல்வது போல் முகபாவனை காட்டியபடி கடந்தான் . சலிப்பு தட்டாத அந்த இடது கண் புருவ தழும்பு , எத்தனை முறை மேல் நோக்கி விட்டாலும் அவள் வலது கன்னத்தை மறைக்க நினைக்கும் சில முடிகள் , ரசித்தபடியே வந்தான். கணவன் அருகே வந்தவுடன் வெட்கபடாமல் ஒரு இயல்பு சிரிப்பை பரிசாக்கிக்கொண்டே , தன் துப்பட்டாவால் அவன் வியர்வையை துடைக்க ஆரம்பித்தால் . ஒரு கை வியர்வையை துடைக்க , மறு கை அவன் கலைந்த தலை முடியை வகுடு எடுக்காமல் சீவிக் கொண்டுருந்தது . மதிய ’’சாப்பாட்டை ஃப்புல்லா சாப்டீங்களா’’ இல்ல மிச்சம் வச்சிட்டீங்களா , என கோபமே படாமல் , கோபப்படுவது போல் கேட்டு விட்டு சரி வண்டியை ஓட்டுங்க என சொன்னாள், நீ ஒட்டு டீ , முடியல என அவன் சொல்ல சரி உட்காரு என உரிமையாய் சொல்லி , வண்டியை திருப்பி சென்றாள் . அவள் பின்னால் உட்கார்ந்த கணவன் அவள் இடுப்பை மெதுவாக வருடிக்கொண்டே அவள் முதுகின் மேல் சாய்ந்தபடி வீட்டிற்கு செல்லும் அதிர்ஷ்டம் அனைவருக்கும் அமையாது ...

Wednesday, 11 April 2018

தருத்திரம் !!!


தருத்திரமாக நீ கருதும் ’’
உன் உதிர்ந்த முடிகளையும்,
நீ வெட்டிய போட்ட நகங்களையும்,
உன் வீட்டு குப்பையிலிருந்து ,
உன் நினைவாக சேகரித்த நான் ,
வாழ்க்கை எனும் உன் எதிர்கால ஏட்டில் '' நானும் ’’தருத்திரம்'' என்ற பெயரால்
அழைக்கப்படுவேன் என எதிர்பாக்கவில்லை...

Monday, 9 April 2018

இவள் அவள் இல்லை !!!

பெற்றோரின் வற்புறுத்தலில் ,

உறவினர்களின் சம்மதத்துடன்,
ஒற்றை இலக்க சீர் தட்டுக்களை சுமந்த படி,
நீளமான வீதியில் ,
அடையாளம் ஏதுமில்லா வீட்டு வாசலில் ,
புள்ளி வைத்த பூக்கோலம் அன்று ஒரு நாள் மட்டும் அடையாளமாய் மாற ,
கோலம் மேல் கால் படாமல் செல்லும் பாதையை கண்டறிந்து,
அந்த இரும்பு கதவை சத்தமில்லாமல் உறவினர் ஒருவர் திறக்க ,
வந்த சத்தத்தில் உள் இருந்த அனைவரும் வெளியே ஓடோடி வர,
’’வாங்க வாங்க’’ என்ற வார்த்தையை மந்திர சொல்லாக உச்சரித்தபடி,
உறவினர்கள் அனைவரும் உள் செல்ல ,
வாசலின் அருகே கடைசி ஆளாய் இவன் நிற்க ,
தனி ஒரு இருக்கையை இவனுக்கு கட்டாயமாக்கி,
மரியாதை நிமிர்த்தமான விருந்தோம்பலை முடித்தவுடன் ,
அவள் ஒளிந்திருக்கும் அறையை கண்டுபிடிக்க ,
கண்கள் கண்ணாமூச்சி விளையாட ,
அவளின் வாசனையை மறந்த காற்றுக்கு என் சுவாசம் உதவ ,
அவளின் குரல் கலந்த இசையை மட்டும் கண்டறிய சத்தங்களை சமாதானம் செய்த என் செவிகள் ,
அவளின் விலைமதிப்பில்லா புடவையில் ஒளிந்திருக்கும் மொத்த அழகின் சிறிய பங்கான கால் கட்டை விரலை பார்த்த என் கண்கள் சொன்னது , இவள் அவள் இல்லை என்று ,
இவளும் அவள் இல்லையாம் ????????


Thursday, 5 April 2018

கோவில் புறா !!!

விடியலுக்கு முன் பறக்க தொடங்கினேன் , கணாமல் போன 
என்னவளை தேடி ?
கணக்கில்லா திசைகள் ,
வழியில்லா பாதைகள்
நிழலில்லா இடங்கள்
எங்கும் கிடைக்கவில்லை !
பார்வை மங்கி,
பசி மறந்து,
குரல் மெலிந்து,
சதை தொலைந்து ,
அடையாளம் தொலைத்து தேடினேன்,
எங்கும் கிடைக்கவில்லை!
அவளா , இவளா
அப்போதே கிடைத்திருந்தால் ,
சரி இப்போது கிடைப்பாள் ,
ஒருவேலை கிடைக்காமலே இருந்தால்
எங்கும் கிடைக்கா இடத்தில் ,
யாரும் காணா இடத்தில் இறந்து இருந்தால்
என் மன குழப்பத்திற்க்கு பதிலும்
கிடைக்கவில்லை !
இறுதியில் இறகுகளின் ஆயுள் முடியும் நிலையில் ,
நான் தினமும் தஞ்சம் புகும் கோவிலின் உள் சென்று முறையிட முயன்றேன் ,
கடவுளாய் காட்சி தந்தாள் என் காதலி
பல முறை பூஜித்தும் கல்லாகவே காட்சியளித்தாள் !
நீ இருக்கும் இடத்தில் தான் நான் இருப்பேன் என
சொல்லாமல் நின்றாயோ ?
இல்லை ,
தெரிந்தும், தெரியாமலும் என் நிழலில் தான் உன் வாழ்க்கை
எனும் திமிரில் நின்றாயோ?
என் பாதுகாப்பில் தான் இன்றும் நீ, என்ற இறுமாப்பில் நின்றாயோ ?
தெரியவில்லை !
அனாதையாய் வந்த எனக்கு அடைக்கலம்
கொடுத்தவளே !
கருவறையில் நீ கடவுளாய் இருப்பாய்
என்றாள் ?
கோபுரத்தில் புறாவாகவே காத்திருப்பேன் ?
கழுகுகளின் பார்வையில் நான் படாத வரை !!!!



ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....