Monday, 30 July 2018

இரு உயிர் !

ஏன் சென்றாள் ?
எதற்காக சென்றாள் ?
என்னை விட்டு பிரியும் கட்டாயம் ஏனோ ?

யார் கைபிடித்து நான் நடப்பேன் ?
இனி யார் மடியில் என் உறக்கம்  ?
இவை எதற்கும் பதில் தெரியாமல் அழுதுக்கொண்டிருக்கும்
அனாதை ஆசிரமக் குழந்தை !!


ஏன் சென்றாள் ?

எதற்காக சென்றாள் ?
என்னை விட்டு பிரியும் கட்டாயம் ஏனோ ?
யார் கைபிடித்து நான் நடப்பேன் ?
இனி யார் மடியில் என் உறக்கம்  ?
இவை எதற்கும் காரணம் தெரியாமல் மன  நோய் காப்பகத்தில்
யோசித்துக்கொண்டே  மரணமடைந்த மனதுடன்
வாழ்ந்துக்கொண்டிருக்கும் அக்குழந்தையின் தந்தை !!!!!!



Tuesday, 24 July 2018

விட்டு சென்றவளே !!!

உன்னை வர்ணிக்க வார்த்தைகள் தேடுகிறேனடி பெண்ணே !
வார்த்தைகள் எங்கும் கிடைக்கவில்லை பெண்ணே  !
கிடைத்த வார்த்தைகள் பயன்படவுமில்லையடி பெண்ணே !
பயன்படுத்தவும் எனக்கு தெரியவில்லை பெண்ணே!
என் கவிதை குருவிடம் கேட்டு வந்தேனடி பென்ணே 
சந்தேகமும் தீரவில்லையடி பெண்ணே  .

நீ வகுடெடுத்து சீவும் தலை நடுவே உள்ள குங்குமமும் !

உன் கால் விரலை இறுக்கமாய் பிடித்திருக்கும் வளையமும் !

கழுத்து பகுதியை ஆக்கிரமித்திருக்கும் மஞ்சள் கயிறும் !

ஏனோ என் எழுத்துக்களை தடுத்துக்கொண்டே உள்ளதடி பெண்ணே !!!



Monday, 23 July 2018

பணம் !!!


பணத்தால் என்றும் நிம்மதி கிடைப்பதில்லை ?
பணமில்லாதவரிடம் நிம்மதி நிரந்தரமாக இருப்பதில்லை !


குணத்தால் அனைவரும் வேறுபட்டாலும் ,
பணமென்ற சாதியில் நாம் அனைவரும் அடிமைகளே !


சந்தர்ப்ப , சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பணம் தேவைப்படுவதில்லை ,
பணத்தேவைகேற்ப தான் இங்கு,  
சந்தர்ப்பங்களும் , சூழ்நிலைகளும் அமைகிறது !


உறவுகளின் அடிப்படை இரத்த சொந்தங்களாகவே இருந்தாலும் ,
உறவுகளின் வளர்ச்சி பணத்தை மையமாக வைத்தே வளர்கிறது !


நீ நீயாக இருப்பதிற்கும் , நான் நானாக இருப்பதிற்கும்
எந்த பிரச்சினைகளும் இல்லை .
நீ , நான் என்ற எழுத்து நாமாக மாறும் போது
முதலில் பார்க்கப்படும் தகுதி பணமே !


நாமாக மறிய எழுத்து நமக்காக ஒருவர், நமக்குள் ஒருவர் ,
நம் அன்பிற்கு அடையாளமாய் ஒருவர் என உருவாக்கிய பின் ,
அந்த உயிர் வளர மூலதனமாய் இருப்பது  பணமே !


பணத்திற்கு உயிர் உள்ளது என்பதை  வலிக்கு பின்னால் இருக்கும் பசியும் ,
பசிக்கு பின்னால் இருக்கும் வலியும் உணர்த்தும் !


பணம் இருப்பவனுக்கு அது ஒரு பாடம் ,
பணம் இல்லாதவனுக்கு வாழ்க்கையே பாடம் !


பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கைப்பையில் வைத்துப்படுத்தாலும் சரி ,
ரூபாய் நோட்டுக்களை மெத்தையாக்கி அதன் மேல் படுத்தாலும் சரி,
நிம்மதியான தூக்கம் பணத்தை மூலதனாமாகக் கொண்டு ஏன்றும்
அமைவதில்லை !!!!







 

Monday, 16 July 2018

என்னுள் நான் !!!

நான் எதுவாக இருக்க வேண்டும் என்பதை முடிவெடுக்கும் தகுதியை  என்னிடத்தில் தந்து விடு என் ஏமாற்றமே !

Sunday, 15 July 2018

புகைப்படம்


உன்னை பார்க்க அனுமதித்த நீ  உன் புகைப்படத்தைப் பார்க்க ஒரு நொடி கூட அனுமதிக்கவில்லை !

காரணம் உன் உடல் பருமனா ?
இல்லை புகைப்படத்தில் அருகில் இருக்கும் உன் கணவனா?
காரணம் மட்டும்  தெரியவில்லை ?

இறுதி வரை காரணம் சொல்லாமல் சென்றாய் ?

அரை இறுதியில் காரணம் தெரியவில்லை என்றாய் ?

இறுதியில் காரணமே இல்லை என்றாய் !

உன் வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் ,
உன் வாழ்க்கை புரிகிறது !

உன் கனவனுடன் நீ எடுத்த அந்த புகைப்படத்தில் !!!






Tuesday, 10 July 2018

உறவுகள் !!!



வாழ்க்கையில் உறவுகளை பிரிந்த வலிகள் என்றும் வந்ததே இல்லை.

வலி தரும் அளவிற்கு எந்த உறவும் உடன் பயணித்ததில்லை.

உறவுகளின்  அருமையும் தெரியவில்லை . தெரிந்தும் வளரவில்லை .
வளர்ந்தும் தெரியவில்லை .

பெயர் மறந்து உருவம் மறந்து ஆங்காங்கே ,
சிதறி இருக்கும்  சொந்தங்கள் என்றோ ஒரு நாள் கூடும் பொழுது
அடையாளம் தெரியாமல்  காட்டும் போலி பாசங்கள் என்றும்
ஆழ்ந்த அன்பை தந்ததில்லை...

நடப்பதிற்கு பாதை இல்லாதது போல் நடக்கும் மனிதர்களுக்கு மத்தியில்
நம்முடன் யாரும் வரவில்லையே என்ற ஏக்கம் என்னை தொடர்ந்தவாறே வருகிறது .
ஆனால் உறவுகளின் அன்பு மட்டும் தொடரவேயில்லை.

நீண்ட நேரம் ,நீண்ட காலம் ,என் தனிமைக்கு எதிராய் ,
எனக்கு துணையாய்  பயணித்த உறவு எனக்கு பாடமாய் மாறும் என்பதை
நான் அறியவில்லை ..

பகல் பொழுதில் உடன் இருப்பவர்கள் , இரவில் பிரிந்துவிடுவதும் ,
இரவில் உடன் இருக்கமாட்டார்களா என மனம் ஆசைப்படும் உறவு
உதாசினப்படுத்துவதும் , மன அமைதிக்கு எதிரான போராட்டங்கள் அது.
தனிமையை நான் வெறுத்தவன் என தெரிந்தும் ,
தனிமை என்னுடன் பயணிக்க துடிக்கிறது .
துணைக்கு கண்ணீரை அழைத்தால் கண்ணீரும் வரவில்லை

நான் காதலில் தோற்றவனாய் , என் காதல் தோற்று ,
தனிமையின் காதல் என்னுடன் வென்று விடுமோ என்ற பயம் தெடர்கிறது தினமும்,
அச்சமயம் கண்ணீர் மட்டும் தான் துணையாய் வருகிறது  .

விதி என  வாழ்வதா , விதியை வெல்லும்  மதி எங்கே என தேடுவதா ?


விதி இல்லா வாழ்க்கையும் ,மதி இல்லா வாழ்க்கையும் இறந்த உடல் போல் தான்
எவ்வளவு நெருங்கிய உறவென்றாலும்
சில மணித்துளிகளே உடன் இருக்கும் என்பது அனுபவ உண்மையே !

வாழ்க்கையை இயற்கையுடன் ஒப்பிட்டு இரசித்து வாழ ஆசைப்பட்டவனுக்கு ,
இயற்கையாய் அமைவது தான் வாழ்க்கை என புரிய வைத்த ,
புரியா உறவுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் ..





Thursday, 5 July 2018

அன்பு !!!


அன்புள்ள அன்பிற்கு ,

அன்பேனும் வார்த்தைக்கு , அர்த்தம் கற்பித்த அன்பே !
அறியாமை இருளில் உரங்கிய என்னை , அடைக்களம் கொடுத்து தத்தெடுத்த அன்பே !
உன் சந்தர்ப்ப , சூழ்நிலையை என் காலங்களுக்கு விருந்தாக்கி ,
நீ செல்லும் பாதைக்கு என் பெயர் வைத்த அன்பே !
ஓவியமாக இருந்த என் உருவத்திற்கு உயிர் கொடுத்து வண்ணம் பூசிய அன்பே !
என் கண் இமை மடிப்பில், உன் பார்வையை பதுக்கி வைத்து,
என் ராவு தூக்கத்தில் என்னை பாதுகாத்த அன்பே !
காதல் என்ற உலகத்தில் நம் உறவுக்கும் முகவரி கொடுத்து, அதில் நம் விலாசத்தை நிரந்தரமாக்கிய அன்பே !
தேடி தேடி சென்றாலும் துளையாமல் என்னை துளைத்த அன்பே !
பெற்றோர் வைத்த பெயர் மறக்க , நி செல்லமாய் கூப்பிட்ட அந்த பெயரில் துளைந்தேனடி அன்பே !
இல்லை என்ற சொல் உன் கனவிலும் இல்லை ,
வா ! வாழ்க்கை பயணத்தை ,அனுமதில்லாமல்
அனுபவைக்கலாம் ,
என உன் வாழ்க்கையில் என்னை அனுமதித்த அன்பே !
வாழ்க்கை என்பதன் பொருள் புரியும் முன்னே ,
அன்பேனும் வார்த்தை இரவு தூக்கத்திற்கு போதும் , பகல் வாழ்க்கைக்கு பணம் வேண்டும் என்ற வாழ்க்கை புரிதலை புரியவைத்த
அன்பே !
ஒரு வேளை அன்பின் மற்றொரு பெயர் பணமாய் இருக்குமோ !
உறவின் வளர்ச்சிக்கு பணம் கட்டாயமோ !
மகிழ்ச்சி மனதிற்கு மட்டும் தான் ,
உடல் வாழ பணம் தேவை.
அன்பு மட்டும் போதுமானதாய் இருக்காது
என்று புரியவைத்தமைக்கு நன்றி அன்பே !!!!!!

Wednesday, 4 July 2018

தூக்கம் !!!

அன்றிரவிலிருந்து தூக்கம் மட்டும் எதிரியாகிக் கொண்டே இருந்தது !
நாளை மாறும் , நாளை மறுநாள் மாறும் என்ற நினைப்பு யதார்த்தமானாலும் , நிஜத்தில் இவைகள் மறுக்கப்பட்டவையாகவே இருந்தது !
கனவில் வாழ்பவனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பது அன்றிலிருந்து தான் தெரிய ஆரம்பித்தது !
வாழ்க்கை கனவில் மட்டும் இருப்பதும் ,கனவாய் மட்டும் இருப்பதும் அன்றிரவு முதல் தினம் தினம் நினைவுப்படுத்தியே இருந்தது !
யாருடைய அனுமதியும் இல்லை , யாரிடமும் அனுமதி கேட்க்கவும் இல்லை, உன் அனுமதியுடன் உன் சிகை என் தோல் சாய்ந்த அந்த இரவு !
உன் சிகையிலிருந்து வரும் உன்னை என்னிடம் அறிமுகம் செய்த அந்த வாசனையை மட்டும் நான் சுவாசித்த அந்த இரவு !
விழி திறந்த உன் முதிர்ந்த பார்வையில் நான் முழ்கிய அந்த இரவு !
உன் தோல் சாயும் போது தோழியாகவும் , மடி சாய்கையில் மனைவியாகவும் , கோபத்தில் நண்பனாகவும் , நீ இருப்பாயா ? என்ற சந்தேகப்பார்வையை உன் மேல் நான் செலுத்திய அந்த இரவு !
என் விரல் தீண்ட , உன் அனுமதிக் கேட்க பரிதவித்த என் உதடுகள் பேச நினைக்கும் மெளன மொழிகளை , கண்டும் காணாததுப் போல் நீ இருந்த அந்த இரவு !
அனுமதிக் கேட்க நீ இன்று உன்னுடையவன் இல்லை , என்றும் நீ என்னுடையவன் . அனுமதில்லாமல் எடுத்துக்கொள் , நான் உன்னுடையவள் என்ற உன் சிரிப்பால் , சைகை தந்த அந்த இரவு !
பயத்தை மறைத்து , பதட்டத்துடன் உன் அருகில் நெருங்கிய அந்த இரவு !
சிரித்தவாறு என் கனனத்தை கிள்ளிவிட்டு விலிகி சென்றாள் உன்னை போல் ஒரு பொழுது போக்காளன் யாருமில்லை , இதற்கு பின் நான் பார்க்கபோவதும் இல்லை என்று !
கண் விழித்து பார்த்தேன் என் கன்னத்தை கிள்ளிய அவளது தழும்புமில்லை . அவளின் சிகை என் மேல் விழுந்த தடயமுமில்லை .
கனவிலும் விலகி சென்றாள் , அனுமதி இல்லா என் தூக்கத்தை திருடி சென்ற காரணம் மட்டும் சொல்லாமல் ?
அன்று இரவிலிருந்து தூக்கம் மட்டும் எதிரியாகிக் கொண்டேயுள்ளது !!!

Show More Reactions

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....